- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Breakfast, dinner
பிரட் தோசை கேட்கவே கொஞ்சம் புதிய ரெசிபி மாதிரி இருக்கும். ஆனா இப்போ ரீசண்டா இந்த தோசை தான் ரொம்பவே வைரலா போயிட்டு இருந்துச்சு. எப்பவுமே வீட்டுல இட்லி தோசைக்கு மாவு அரைச்சு வச்சிருப்போம். ஆனா ஒரு சில சமயத்துல இட்லி தோசை மாவு காலியாகிவிடும் ஒரு சிலருக்கு வெளியில கடைகளில் போய் வாங்குறதுக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா ஒரு சிலர் கடைகளில் போய் மாவு வாங்க மாட்டாங்க அந்த மாதிரி சமயத்துல வீட்ல சப்பாத்தி செய்வதற்கும் மாவு இல்ல அப்படின்னா கவலைக்கிடாதீங்க பிரட் இருந்துச்சுன்னா போதும் பிரட் வச்சு ஒரு சூப்பரான பிரட் தோசை ரெடி பண்ணிடலாம்.
இதுகூட தக்காளி சட்னி தேங்காய் சட்னி மல்லி சட்னி புதினா சட்னி, சாம்பார், மட்டன் கிரேவி சிக்கன் கிரேவி அப்படின்னு எது வேணாலும் ஊத்தி சாப்பிடலாம். டேஸ்ட் ரொம்பவே அற்புதமா இருக்கும். பிரட் ரவை எல்லாமே சேர்க்கறதுனால நல்லா சாப்பிடுறதுக்கே கிரிஸ்பியா இருக்கும். சுவையான கிரிஸ்பியான இந்த பிரட் தோசையை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு பாத்தீங்கன்னா அதுக்கப்புறம் இட்லி தோசைக்கு மாவு இல்லாத சமயத்துல இந்த தோசை தான் உங்க வீட்ல செய்வீங்க. மொறு மொறுன்னு கிரிஸ்பியா இருக்கிறதால குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க.
மொறு மொறுனு மட்டும் இல்லாம சாப்பிடறதுக்கே நல்லா சாஃப்டாகவும் இருக்கும். சைடு டிஷ் இல்லாம வெறும் தோசையா கூட சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் இந்த பிரட் தோசை நல்லா இருக்கும். சுவையான இந்த பிரட் தோசை சாப்பிடுறதுக்கு குழந்தைகள் பெரியவங்க எல்லாருமே ஆர்வம் காட்டுவாங்க. வீட்டுக்கு விருந்தளிகள் யாராவது டக்குனு வந்துட்டா கூட வெளியில போய் மாவு வாங்க முடியலன்னா அவங்களுக்கு இந்த சூப்பரான மொறு மொறுப்பான தோசையை செஞ்சு கொடுக்கலாம். இப்ப வாங்க இந்த சுவையான பிரட் தோசை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சூப்பரான இந்த சில்லி பிரட் ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!
Ingredients
Method
ஒரு மிக்ஸி ஜாரில் பிரட் சேர்த்து அரைத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்.
அதனுடன் ரவை அரிசி மாவு பொடியாக நறுக்கிய பூண்டு கொத்தமல்லி இலைகள் சீரகம், சில்லி ஃப்ளேக்ஸ் உப்பு அனைத்தும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
ரவை தோசைக்கு மாவு கலப்பது போல் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.
ஒரு தோசை கல்லில் பரவலாக ஊற்றி எண்ணெய் ஊற்றி சுட்டு எடுத்தால் சுவையான பிரட் தோசை தயார்.






