முருங்கைக்காய் வச்சு ஒரு தடவை இந்த ஊறுகாய் ட்ரை பண்ணி பாருங்க!!

- Advertisement -

முருங்கக்காய் வச்சு முருங்கைக்காய் புளிக்குழம்பு, முருங்கைக்காய் சாம்பார் இந்த மாதிரி ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க ஆனா முருங்கைக்காய் வச்சு கண்டிப்பாக ஒரு தடவை கூட ஊறுகாய் செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க. ஒரே ஒரு தடவை இந்த ஊறுகாய் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி நீங்க இந்த ஊறுகாய் செய்வீங்க இதை ஃப்ரிட்ஜுக்குள்ள வச்சு மூணு மாசம் வரைக்கும் பயன்படுத்தலாம். எலுமிச்சை ஊறுகாய், ஆவக்காய் ஊறுகாய், பூண்டு ஊறுகாய் மாங்காய் ஊறுகாய் இதெல்லாம் வீட்ல செஞ்சு இருப்பீங்க.

-விளம்பரம்-

ஒரு தடவை இந்த முருங்கைக்காய் ஊறுகாயும் வீட்ல செஞ்சு பாருங்க. தயிர் சாதத்துக்கு ஒரு சூப்பரான காமினேஷன் இருக்கும் சாம்பார் சாதத்துக்கும் பழைய சாதம் சுடு கஞ்சி இது எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷன் ஆக இருக்கும். முருங்கைக்காய் வைத்து ஊறுகாய் செஞ்சா எப்படி இருக்கும் அப்படின்னு யோசிக்க வேண்டாம் ஒரு தடவை செஞ்சு பாருங்க கண்டிப்பா அடிக்கடி செய்வீங்க. இந்த டேஸ்டான முருங்கைக்காய் ஊறுகாய் வீட்டுக்கு வர விருந்தாளிகளுக்கும் செஞ்சு கொடுக்கலாம்.

- Advertisement -

கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவாங்க. நீங்க ஏதாவது போகும்போது கூட லெமன் சாதம் புளி சாதம் இந்த மாதிரி செஞ்சு அதுக்கு தொட்டுக்க இந்த மாதிரி ஒரு முருங்கைக்காய் செஞ்சு கொண்டு போகலாம் செம்ம டேஸ்ட்டா இருக்கும் கெட்டே போகாது. நல்ல காரசாரமா புளிப்பா முருங்கைக்காய் ஊறுகாய் சாப்பிடுவதற்கு ஆசையா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான முருங்கைக்காய் ஊறுகாய் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

முருங்கைக்காய் ஊறுகாய் | Drumstick Pickle Recipe In Tamil

முருங்கக்காய் வச்சு முருங்கைக்காய் புளிக்குழம்பு, முருங்கைக்காய் சாம்பார் இந்த மாதிரி ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க ஆனா முருங்கைக்காய் வச்சு கண்டிப்பாக ஒரு தடவை கூட ஊறுகாய் செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க. ஒரே ஒரு தடவை இந்த ஊறுகாய் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி நீங்க இந்த ஊறுகாய் செய்வீங்க இதை ஃப்ரிட்ஜுக்குள்ள வச்சு மூணு மாசம் வரைக்கும் பயன்படுத்தலாம். எலுமிச்சை ஊறுகாய், ஆவக்காய் ஊறுகாய், பூண்டு ஊறுகாய் மாங்காய் ஊறுகாய் இதெல்லாம் வீட்ல செஞ்சு இருப்பீங்க. ஒரு தடவை இந்த முருங்கைக்காய் ஊறுகாயும் வீட்ல செஞ்சு பாருங்க. தயிர் சாதத்துக்கு ஒரு சூப்பரான காமினேஷன் இருக்கும் சாம்பார் சாதத்துக்கும் பழைய சாதம் சுடு கஞ்சி இது எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷன் ஆக இருக்கும். முருங்கைக்காய் வைத்து ஊறுகாய் செஞ்சா எப்படி இருக்கும்ன்னு யோசிக்க வேண்டாம் ஒரு தடவை செஞ்சு பாருங்க கண்டிப்பா அடிக்கடி செய்வீங்க.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Side Dish
Cuisine: Indian, TAMIL
Keyword: Drumstick Pickle
Yield: 5 People
Calories: 60kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 3 முருங்கைக்காய்
  • 2 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 2 காய்ந்த மிளகாய்
  • 7 பல் பூண்டு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • புளி நெல்லிக்காய் அளவு
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • ஒரு கடாயில் கடுகு வெந்தயம் சேர்த்து வறுத்து ஆறவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • புளியை நன்றாக கரைத்து ஒரு கடாயில் சேர்த்து சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி புளிக்கரைசல் கெட்டியாகும் வரை கிளறி எடுத்துக் கொள்ளவும்.
  • அதே கடாயில் எண்ணெய் ஊற்றி முருங்கைக்காயை சிறு துண்டுகளாக வெட்டி சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதே எண்ணெயில் தட்டிய பூண்டு கடுகு உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை காய்ந்து மிளகாய் சேர்த்து தாளித்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள் வறுத்து அரைத்த பொடி முருங்கைக்காய் புளி கரைசல்,தாளித்து வைத்துள்ள தாளிப்பு சேர்த்து நன்றாக கலந்து ஒரு நாள் ஊறவைத்து எடுத்தால் சுவையான முருங்கைக்காய் ஊறுகாய் தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 60kcal | Carbohydrates: 5.1g | Protein: 24g | Fat: 3.7g | Sodium: 142mg | Potassium: 135mg | Vitamin A: 41IU | Vitamin C: 106mg | Calcium: 18mg | Iron: 21mg

இதனையும் படியுங்கள் : முருங்கைக்காய் தேங்காய்ப் பால் குழம்பு