கிரீன் பட்டாணி புலாவ் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

- Advertisement -

வீட்ல பச்சை பட்டாணி இருந்துச்சுன்னா இந்த சூப்பரான கிரீன் பட்டாணி புலாவ் செஞ்சு பாருங்க. இதை செய்வது ரொம்ப ரொம்ப ஈசி சட்டுனு செஞ்சு முடிச்சுக்கலாம். குழந்தைகளுக்கு ஸ்கூல் லஞ்ச் பாக்ஸ்க்கு இந்த ரெசிபியை கொடுத்து விட்டா சாப்பிட்டு முடிச்சுட்டு காலியாக தான் டிபன் பாக்ஸ கொண்டு வருவாங்க. இதுக்கு சைடிஸ் கூட தேவைப்படாது. சுவையான இந்த கிரீன் பட்டாணி புலாவ் ரெசிபியை கண்டிப்பா எல்லாரும் வீட்டுல ஒரு தடவ செஞ்சு பாருங்க. பிரஷ்ஷாக கிடைக்கின்ற பட்டாணி வைத்து இந்த ரெசிபியை செய்தால் சுவையை ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும்.

-விளம்பரம்-

டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா எல்லாரும் வீட்ல செஞ்சு பாருங்க. ஆபீஸ் போறவங்களுக்கு காலேஜ் போறவங்களுக்கு எல்லாருக்கும் இதை லஞ்ச் பாக்ஸுக்கு கொடுக்கலாம். ரொம்ப அருமையாக இருக்கும். சுவையான இந்த ரெசிபியை கண்டிப்பா எல்லாரும் செஞ்சு என்ஜாய் பண்ணி சாப்பிடுங்க இது கூட கொஞ்சமா தயிர் வெங்காயம் வச்சு சாப்பிட்டா ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இதுக்கு கொத்தமல்லி இலைகள் புதினா இலைகள் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து செய்ய போறோம் காரத்துக்கு பச்சை மிளகாய் மட்டுமே போதுமானது.

- Advertisement -

குழந்தைகளுக்கு கொடுக்கும் போது குழந்தைகளுக்கு தேவையான அளவு காரம் சேர்த்துக்கோங்க. புதினா கொத்தமல்லி இலைகள் எல்லாமே சேர்த்து செய்றதால் கிரீன் கலர்ல பாக்குறதுக்கே அவ்ளோ அருமையா இருக்கும். இந்த ருசியான புலாவ் ரெசிபியை கண்டிப்பாக எல்லாரும் வீட்ல ட்ரை பண்ணி பாக்கணும் குழம்பு கூட்டு பொரியல் அப்படின்னு சாப்பிடுறதுக்கு போர் அடிச்சதுனா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க. காய்ந்த பட்டாணி வைத்தும் இந்த ரெசிபியை செய்யலாம்.

அதுக்கு பட்டாணியை 8 மணி நேரம் ஊற வச்சு செய்யணும். இந்த ரெசிபி செய்றதுக்கு நிறைய நேரம் தேவைப்படாது குறைவான நேரம் தேவைப்படும் மேலும் பொருட்களும் ரொம்ப ரொம்ப குறைவாக இருந்தாலே போதுமானது தான். தக்காளி மிளகாய் தூள் கரம் மசாலா அப்படின்னு எதுவுமே சேர்க்க தேவை இல்லை. ஆனாலும் பிரியாணி டேஸ்ட்ல சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான கிரீன் பச்சை பட்டாணி புலாவ் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
5 from 1 vote

கிரீன் பட்டாணி புலாவ் | Green Peas Pulao Recipe In Tamil

வீட்ல பச்சை பட்டாணி இருந்துச்சுன்னா இந்த சூப்பரான கிரீன் பட்டாணி புலாவ் செஞ்சு பாருங்க. இதை செய்வது ரொம்ப ரொம்ப ஈசி சட்டுனு செஞ்சு முடிச்சுக்கலாம். குழந்தைகளுக்கு ஸ்கூல் லஞ்ச் பாக்ஸ்க்கு இந்த ரெசிபியை கொடுத்து விட்டா சாப்பிட்டு முடிச்சுட்டு காலியாக தான் டிபன் பாக்ஸ கொண்டு வருவாங்க. இதுக்கு சைடிஸ் கூட தேவைப்படாது. சுவையான இந்த கிரீன் பட்டாணி புலாவ் ரெசிபியை கண்டிப்பா எல்லாரும் வீட்டுல ஒரு தடவ செஞ்சு பாருங்க. பிரஷ்ஷாக கிடைக்கின்ற பட்டாணி வைத்து இந்த ரெசிபியை செய்தால் சுவையை ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும். டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா எல்லாரும் வீட்ல செஞ்சு பாருங்க. ஆபீஸ் போறவங்களுக்கு காலேஜ் போறவங்களுக்கு எல்லாருக்கும் இதை லஞ்ச் பாக்ஸுக்கு கொடுக்கலாம். ரொம்ப அருமையாக இருக்கும். சுவையான இந்த ரெசிபியை கண்டிப்பா எல்லாரும் செஞ்சு என்ஜாய் பண்ணி சாப்பிடுங்க.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: Green Peas Pulao
Yield: 4 People
Calories: 126kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பச்சை பட்டாணி
  • 1 கப் பாசுமதி அரிசி
  • 1 கைப்பிடி புதினா, கொத்தமல்லி
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 பட்டை, கிராம்பு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் நெய்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 நட்சத்திர சோம்பு
  • 3 பச்சை மிளகாய்

செய்முறை

  • ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி இலைகள் புதினா இலைகள் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு நட்சத்திர சோம்பு, சோம்பு அனைத்தும் சேர்த்து பொரிந்ததும் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கியதும் அரைத்து வைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
  • பச்சை பட்டாணியை சேர்த்து வதக்கியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் அரிசியை கழுவி சேர்த்துக் கொள்ளவும்.
  • ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து ஒரு விசில் விட்டு இறக்கினால் சுவையான கிரீன் பட்டாணி புலாவ் தயார்.

Nutrition

Serving: 450g | Calories: 126kcal | Carbohydrates: 3.6g | Protein: 14g | Fat: 2.7g | Sodium: 84mg | Potassium: 123mg | Fiber: 11g | Vitamin A: 93IU | Vitamin C: 171mg | Calcium: 32mg | Iron: 24mg

இதனையும் படியுங்கள் : குதிரைவாலி தேங்காய்ப்பால் புலாவ்

-விளம்பரம்-