- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
நிறைய பேர் வீட்ல கோவக்காய் அடிக்கடி சமைக்க மாட்டாங்க ஒரு சிலர்தான் அதிகமா கோவக்காய் சமைப்பாங்க. ஆனா கோவக்காய் சாப்பிடுவதால் உடம்புக்கு நிறைய நிறைய நன்மைகள் இருக்கு இந்த கோவக்காய் வைத்து தயிர் குழம்பு கூட செய்வாங்க ரொம்பவே அட்டகாசமா இருக்கும். இந்த கோவக்காய் தயிர் குழம்பு ரெசிபி கண்டிப்பா நிறைய பேரு ட்ரை பண்ணி பார்த்திருப்பீங்க. அந்த வகையில் கோவக்காய் வைத்து ரொம்ப ரொம்ப சிம்பிளா செய்யக்கூடிய ஒரு சூப்பரான பிரை இப்ப பார்க்கலாம்.
இந்த கோவக்காய் பிரை ரெசிபி பருப்பு சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம், லெமன் சாதம், புளி சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷனாக இருக்கும். இந்த கோவக்காய் பிரை ரெசிபி ஒரு தடவ ட்ரை பண்ணி பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இந்த கோவக்காய் பிரையில் நம்ம இறுதியாக அரிசி மாவு சேர்த்து நல்லா வறுக்க போறோம். அப்படி அரிசி மாவு சேர்த்து செஞ்சா நல்ல மொறு மொறுன்னு சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த ருசியான டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா எல்லாரும் வீட்ல ஒரே ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க.
குழந்தைகளுக்கு கண்டிப்பா இந்த கோவக்காயை இந்த மாதிரி செஞ்சு கொடுத்தா வேண்டாம்னு சொல்லாம அடம் பிடிக்காமல் சாப்பிடுவாங்க. சாப்பிட மாட்டேன் என அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு இந்த மாதிரி தான் செஞ்சு கொடுக்கணும். அப்பதான் இதோட சத்துக்கள் குழந்தைகளுக்கு போய் பச்சை காய்கறிகள் உடம்புக்கு நல்லது அதுல கோவக்காய் ரொம்ப ரொம்ப நல்லது. அதனால கண்டிப்பா கோவக்காய் வாங்கினா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த ருசியான சிம்பிளான கோவக்காய் ப்ரை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கோவைக்காய் சட்னி செய்வது எப்படி
Ingredients
Method
கோவக்காய் நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். அதில் உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கருவேப்பிலை சேர்த்து கலந்து வைத்துள்ள கோவக்காய் சேர்த்து நன்றாக எண்ணெயிலேயே வதக்கவும்.
கோவக்காய் நன்றாக வெந்ததும் அரிசி மாவு சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக வறுத்து இறக்கினால் சுவையான கோவக்காய் பிரை தயார்.






