ஒரு சிலருக்கு குழம்பு கூட்டு பொரியல் ரசம் அப்படின்னு வச்சு சாப்பிடறதுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒரு சிலருக்கு துவையல் தொக்கு இந்த மாதிரி வச்சு சாப்பிடுவதற்கு ரொம்ப பிடிக்கும். அந்த வகையில இன்னைக்கு நம்ம ஒரு சூப்பரான டேஸ்டான புதினா தொக்கு ரெசிபி பாக்க போறோம். இந்த புதினா தொக்கு ரெசிபி செஞ்சு வச்சு பிரிட்ஜுக்குள்ள வச்சுக்கிட்டா ஒரு மாசத்துக்கு கெட்டுப்போகாது அப்படியே இருக்கும். ஆனா நம்ம ஒரு பத்து நாள் வச்சு சாப்பிடுறது நல்லது. கடலை பருப்பு உளுந்தம் பருப்பு மல்லி விதைகள் இது எல்லாத்தையும் நல்லா வறுத்து அரைச்சு இந்த புதினா தொக்கு செய்யும் போது வாசனை ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும்.
டேஸ்டும் ரொம்ப ரொம்ப அட்டகாசமாக இருக்கும். இந்த சுவையான புதினா தொக்கு ரெசிபியை இட்லி தோசை சப்பாத்தி பூரி எல்லாத்துக்கும் சைடிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். அது மட்டும் இல்லாம சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட ரொம்பவே அருமையாக இருக்கும். பழைய சாதம் சுடு கஞ்சி இது எல்லாத்துக்கும் இந்த துவையலை சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். இந்த புதினா தொக்குல சாதம் போட்டு கிளறி குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்துவிடலாம். இதுக்கு சைடு டிஷ் ஆக அப்பளம் பொருச்சாலே ரொம்ப டேஸ்டா இருக்கும்.
சுவையான இந்த புதினா தொக்கு ரெசிபியை செஞ்சு வச்சுக்கோங்க வீட்ல குழம்பு வைக்காத அப்போ பயன்படும். உருளைக்கிழங்கு வறுவல் கத்திரிக்காய் வறுவல் இது எல்லாமே இந்த புதினா தொக்கு போட்டு கிளறி எடுக்கிற சாதத்துக்கு ரொம்ப சூப்பராவே இருக்கும். ஹாஸ்டல்ல இருக்கறவங்க இந்த புதினா தொக்கு ரெசிபியை செஞ்சு எடுத்துட்டு போங்க. பத்து நாளைக்கு உங்களுக்கு பயன்படும் இப்ப வாங்க இந்த சுவையான புதினா தொக்கு ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
புதினா தொக்கு | Mint Thokku Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
- 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 கட்டு புதினா
- 1 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை
- 1 துண்டு புளி
- 1 டேபிள் ஸ்பூன் மல்லி
- 4 வர மிளகாய்
- 2 பச்சை மிளகாய்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடலைப்பருப்பு உளுந்தம் பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
- மல்லி விதைகள் சீரகம் கருவேப்பிலை சேர்த்து வறுத்ததும் காய்ந்த மிளகாய் பச்சை மிளகாய் புளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- வறுத்த வேர்க்கடலை சேர்த்து நன்றாக கிளறி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- அதே கடாயில் எண்ணெய் சேர்த்து புதினா இலைகள் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
- மிக்ஸி ஜாரில் வறுத்த பருப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து பின்னர் புதினா இலைகள் உப்பு சேர்த்து அரைத்து எடுத்தால் சுவையான புதினா தொக்கு தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : புதினா துவையல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!