வெங்காயத்தில் எக்கசக்க ஆரோக்கிய நம்மைகள் உள்ளது. ஆனால், அவற்றை நாம் சரிவர உண்பதில்லை. வெங்காயத்தின் ஆரோக்கிய நன்மைகள் உங்கள் குழந்தைகளுக்கு முழுமையாக கிடைக்கும் வகையில், வெங்காயத்தை வைத்து ஒரு வெரைட்டி ரைஸ் செய்யலாமா? ஆம் வெங்காயத்திலும் ஒரே சூப்பரான வெரைட்டி ரைஸ் செய்யலாம்.
பள்ளி செல்லும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் உள்ள அம்மாக்கள் நாளைக்கு குழந்தைக்கு என்ன லன்ச் கொடுக்கப்பது என யோசித்தே பாதிப்பேருக்கு டென்ஷன் அதிகரிக்கும். நாம் ஏதாவது சாப்பாடு செய்து கொடுத்தால் அதை முழுமையாக திருப்பி சாப்பிடாமல் கொண்டு வரும் குழந்தைகள் நம் ஒவ்வொரு வீட்டிலும் உள்ளனர். அந்தவகையில், ஆரோக்கியமான அதே சமயம் சுவையான சாதம் பற்றி இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.
வெறும் 4 வெங்காயம் இருந்தா போதும். அருமையான ஆனியன் ரைஸ் செய்யலாம். வீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லை. என்ன சாதம் செய்வது என்று தெரியவில்லை எனும்போது ரொம்ப ரொம்ப ஈசியாக இந்த ஆனியன் ரைஸ் செய்து கொடுங்கள். குறிப்பாக பேச்சாளராக இருப்பவர்களுக்கு இந்த வெரைட்டி ரைஸ் ரொம்ப ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். தினமும் ஒரே வகையான உணவு சாப்பிட்டு பலருக்கும் அலுத்துப் போயிருக்கும். எனவே வார இறுதி நாட்களிலாவது இப்படி வித்தியாசமான சுவையில் இருக்கும் உணவை முயற்சி செய்து பார்க்கலாம்.
ஆனியன் ரைஸ் | Onion Rice Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 2 கப் வடித்த சாதம்
- 4 வெங்காயம்
- கொத்தமல்லி, கறிவேப்பிலை சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 2 டேபிள் ஸ்பூன் நெய்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1/4 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 பச்சை மிளகாய்
செய்முறை
- முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- பின் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் சிறிது வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- பின் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு மசாலா போல் வந்ததும் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- பின் மசாலாவும் சாதமும் ஒன்று சேர்ந்து வந்ததும் நெய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான ஆனியன் ரைஸ் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : இறால் பிரைட் ரைஸ் ஹோட்டல் சுவையில் இப்படி செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவில் அப்படியே தங்கிவிடும்!!