- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 3
- Cuisine
- Indian
- Course
- dinner
காலை எப்போதும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? ஒரு வித்தியாசமான, அதே சமயம் சத்தான ஒரு ரெசிபியை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் இறால் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு பிரைட் ரைஸ் செய்யுங்கள். இந்த இறால் பிரைட் ரைஸ் வழக்கமாக செய்யும் பிரைட் ரைஸை போல் இல்லாமல், சுவையாக விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். இந்த பிரைட் ரைஸ் வீட்டில் காலை வேளையில் செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். பிரைட் ரைஸ் பிரியர்கள் பிரியாணி பிரியர்களை விட அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர்.
பிரியாணிக்கு இணையான ஒரு டிஷ் என்றால் அது பிரைட் ரைஸ் மட்டும் தான். ஹோட்டலுக்கு சென்றாலே பாதிப்பேர் எனக்கு பிரைட் ரைஸ் வேணும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்கள். அதை ஹோட்டலில் தான் சாப்பிட வேண்டுமா? இனி வீட்டிலேயே சுவையான பிரைட் ரைஸ் எப்படி செய்வதென்று பார்ப்போமா. துரித உணவு வகையை சார்ந்த பிரைட் ரைஸ், சந்தேகத்திற்கு இடமின்றி இளம் வயதினரின் மிகவும் பிடித்தமான உணவு வகை. பிரைட் ரைசில் பல வகை உண்டு. அசைவ பிரியர்களுக்கு சிக்கன் மற்றும் எக் பிரைடு ரைஸ் மிகவும் பிடித்தமானவையாக இருக்கின்றன. சைவ பிரியர்களுக்கு மஸ்ரூம் மற்றும் பன்னீர் பிரைட் ரைஸ்களுக்கு அடுத்து வெஜிடபிள் பிரைட் ரைஸ் தான் டாப் சாய்ஸாக உள்ளது.
பிரைட் ரைஸ்கலோடு பன்னீர் பட்டர் மசாலா அல்லது கோபி மஞ்சூரியன் சேர்த்து உண்பது பெரும்பாலானோர் விரும்பும் காம்பினேஷன் ஆக உள்ளது. உண்மையில் இந்த இறால் பிரைட் ரைஸ் மிகவும் சுவையாக இருக்கும். ஒருமுறை செய்து சாப்பிட்டால், மீண்டும் மீண்டும் சமைக்க வைக்கும். குழந்தைகளுக்கும் இது மிகவும் பிடிக்கும். எப்போது பார்த்தாலும் சாம்பார், ரசம், குழம்பு என்று வைத்து அலுத்துப் போன நேரத்தில் வாரத்தில் ஒரு நாள் இப்படி வெரைட்டி ரைஸ் செய்து சாப்பிடலாம்.
இதனையும் படியுங்கள் : 10 நிமிடத்தில் சுவையான மற்றும் ஆரோக்கியமான துளசி பிரைட் ரைஸை வீட்டிலேயே செய்து பாருங்கள் ருசி மிகவும் அபாரமாக இருக்கும்!!
Ingredients
Method
முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து விட்டு மிளகாய்த்தூள், உப்பு, கார்ன் ப்ளவர், அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து பொறித்து எடுத்துக் கொள்ளவும்.
பின் கேரட், பீன்ஸ், குடைமிளகாய், பூண்டு, முட்டைக்கோஸ், வெங்காயம், வெங்காயத்தாள் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சூடாக்கவும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின் வெங்காயம், கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், உப்பு சேர்த்து பாதியளவு வதக்கவும். பின் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து விடவும்.
பின் சோயா சாஸ், மிளகாய் சாஸ், மிளகாய்தூள், மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
அதன்பிறகு வெங்காயத்தாள் மற்றும் குடைமிளகாய் சேர்த்து அதனுடன் இறால் சேர்த்து நன்கு கலந்து வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான இறால் பிரைட் ரைஸ் தயார். இதற்கு தக்காளி சாஸ் வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.






