பீர்க்கங்காய் கூட்டு இந்த மாதிரி செஞ்சீங்கன்னா எல்லாத்துக்குமே சூப்பரான சைடு டிஷ்ஷா இருக்கும்!!

- Advertisement -

காய்கறிகளில் நிறைய காய்கறிகள் இருக்கு. ஆனா பெரும்பாலும் பீர்க்கங்காய் அதிகமா சமைக்க மாட்டோம். பீர்க்கங்காய் அவ்ளோ சத்துக்கள் நிறைந்தது. பீர்க்கங்காய் மட்டும் இல்லாமல் பீர்க்கங்காய் ஓட தோல்லையும் நிறைய சத்துக்கள் இருக்கு. அதனால பீர்க்கங்காய் கிடைச்சா அதை இனிமேல் ஒதுக்காமல் பீர்க்கங்காயில் எண்ணெய் காய் மாதிரி போட்டு சாப்பிட்டு பாருங்க அதுவும் சூப்பரா இருக்கும் அப்படி இல்லன்னா பீர்க்கங்காய் கூட்டு மாதிரி செஞ்சு பாருங்க. அவ்ளோ ருசியா இருக்கும். இந்த பீர்க்கங்காய் கூட்டை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அவ்ளோ ருசியா இருக்கும்.

-விளம்பரம்-

சாதம் மட்டுமில்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி பூரின்னு எல்லாத்துக்குமே ஒரு பெர்ஃபெக்ட்டான காம்பினேஷன் இது. சுரக்காய் கூட்டு இட்லி தோசைக்கு சப்பாத்திக்கெல்லாம் நல்லா இருக்குமா அப்படின்னு யோசிக்காதீங்க ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் எப்ப பீர்க்கங்காய் கிடைச்சாலும் கண்டிப்பா செஞ்சு சாப்பிட்டு பாப்பீங்க. குழந்தைகளுக்கு ஸ்கூல் லஞ்ச் பாக்ஸ்க்கு இந்த பீர்க்கங்காய் போட்டு சாதம் கிளறி கொடுத்து விடலாம். இந்த கூட்டு ரசம் சாதத்துக்கும் கலவை சாதத்துக்கும் ரொம்பவே அருமையா இருக்கும். ஒரே ஒரு தடவை இந்த கூட்டு செஞ்சு பாருங்க இதை மொத்தமான குக்கர்லையே செஞ்சுடலாம்.

- Advertisement -

அதுக்கப்புறம் தாளிச்சு கொட்டினால் போதும். 10 15 நிமிஷத்துல சூப்பரா இத செஞ்சுடலாம். நிறைய நேரம் தேவைப்படாது. ரொம்பவே குறைவான நேரத்திலேயே இந்த ரெசிபியை செஞ்சிடலாம். சப்பாத்திக்கு எப்பவுமே உருளைக்கிழங்கு குருமா சிக்கன் குருமா, மட்டன் குருமானு செய்யாம இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க கண்டிப்பா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. பீர்க்கங்காய் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை குறையும். உடல் சூடு குறையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இந்த மாதிரி நிறைய நன்மைகள் நடக்கும். இப்ப வாங்க இந்த சுவையான சிம்பிளான பீர்க்கங்காய் கூட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
3 from 1 vote

பீர்க்கங்காய் கூட்டு | Peerkangai Kootu Recipe In Tamil

காய்கறிகளில் நிறைய காய்கறிகள் இருக்கு. ஆனா பெரும்பாலும் பீர்க்கங்காய் அதிகமா சமைக்க மாட்டோம். பீர்க்கங்காய் அவ்ளோ சத்துக்கள் நிறைந்தது. பீர்க்கங்காய் மட்டும் இல்லாமல் பீர்க்கங்காய் ஓட தோல்லையும் நிறைய சத்துக்கள் இருக்கு. அதனால பீர்க்கங்காய் கிடைச்சா அதை இனிமேல் ஒதுக்காமல் பீர்க்கங்காயில் எண்ணெய் காய் மாதிரி போட்டு சாப்பிட்டு பாருங்க அதுவும் சூப்பரா இருக்கும் அப்படி இல்லன்னா பீர்க்கங்காய் கூட்டு மாதிரி செஞ்சு பாருங்க. அவ்ளோ ருசியா இருக்கும். இந்த பீர்க்கங்காய் கூட்டை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அவ்ளோ ருசியா இருக்கும். சாதம் மட்டுமில்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி பூரின்னு எல்லாத்துக்குமே ஒரு பெர்ஃபெக்ட்டான காம்பினேஷன் இது. குழந்தைகளுக்கு ஸ்கூல் லஞ்ச் பாக்ஸ்க்கு இந்த பீர்க்கங்காய் போட்டு சாதம் கிளறி கொடுத்து விடலாம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Side Dish
Cuisine: Indian, TAMIL
Keyword: Peerkangai Kootu
Yield: 4 People
Calories: 194kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 1/4 கி பீர்க்கங்காய்
  • 1/4 கப் துவரம் பருப்பு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 4 பல் பூண்டு
  • 1 டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 பச்சை மிளகாய்

செய்முறை

  • ஒரு குக்கரில் நறுக்கிய பீர்க்கங்காய் சேர்த்து ஒரு பெரிய வெங்காயம் இரண்டு தக்காளி துவரம் பருப்பு பச்சை மிளகாய்,பூண்டு குழம்பு மிளகாய் தூள் உப்பு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி மூன்று விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு சீரகம், கருவேப்பிலை இப்படியாக நறுக்கிய பெரிய வெங்காயம் அனைத்தும் சேர்த்து தாளித்து கொள்ளவும்.
  • தாளித்ததை அதனுடன் சேர்த்து கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான பீர்க்கங்காய் கூட்டு தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 194kcal | Carbohydrates: 3.4g | Protein: 19g | Fat: 2.7g | Sodium: 55mg | Potassium: 139mg | Vitamin C: 285mg | Calcium: 34mg | Iron: 22mg

இதனையும் படியுங்கள் : கடலைப்பருப்பு போட்டு பீர்க்கங்காய் பொரியல் ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க!