மசால் தோசை, கோதுமை தோசை, ஓட்ஸ் தோசை, வெங்காய தோசை, சாக்லேட் தோசை, முட்டை தோசை, காளான் தோசை, சீஸ் தோசை அப்படின்னு தோசையில நிறைய வெரைட்டிஸ் இருக்கு. இப்ப எல்லாம் இன்ஸ்டன்ட்டா நிறைய தோசை ரெசிப்பி கூட செஞ்சுட்டு தான் இருக்காங்க. அந்த வகையில் இந்த வெயில் காலத்துக்கு ஏத்த மாதிரி நீர் காய்கறியான பூசணிக்காய் வச்சு ஒரு சூப்பரான தோசை ரெசிப்பி செய்ய போறோம். இதுக்கு அரிசி மாவு கூட சேர்க்க தேவையில்லை ஆனா மொறு மொறுன்னு சூப்பரான நமக்கு தோசை கிடைக்கும்.
ரவையும் அது கூடவே கொஞ்சமா கோதுமை மாவு சேர்த்து இன்னும் கொஞ்சம் பொருட்கள் சேர்த்து செஞ்சோம் அப்படின்னா டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இது கூட தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, சாம்பார், கறி குழம்புல எது வேணும்னாலும் வச்சு சாப்பிடலாம். டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். ஒரே ஒரு தடவை மட்டும் செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த வெயில் காலத்துல நம்ம நிறைய நீர் காய்கறிகள் சாப்பிடணும் ஆனா அந்த மாதிரி நீர் காய்கறிகள் சாப்பிட பிடிக்கலன்னா இந்த மாதிரி தோசையா செஞ்சு சாப்பிடலாம். பொதுவா குழந்தைகள் தோசை அப்படியென்றால் விரும்பி சாப்பிடுவாங்க.
அதனால தோசை கூட அவர்களுக்கு பிடிக்காத ஏதாவது ஒரு காய்கறிகள் சேர்த்து கொடுத்துட்டோம் அப்படின்னா அவங்களுக்கு ஒரு ஆரோக்கியமான உணவு கொடுத்த உணர்வு நமக்கு இருக்கும். அதனால இனிமேல் இந்த மாதிரி குழந்தைகள் காய்கறிகள் சாப்பிட அடம் பிடிச்சவங்கனா சூப்பரான இந்த ரெசிபிகளை செஞ்சு கொடுங்க. இந்த சுவையான டேஸ்டான தோசை ரெசிபியை கண்டிப்பா நீங்க செஞ்சு பாக்கணும். அருமையான டேஸ்ட்ல மொறு மொறுன்னு சூப்பரா கிடைக்கும் மிதமான தீயில் வைத்து தோசை சுட்டா காயோட வாசனையே இருக்காது.
ஆரோக்கியமான இந்த காய் சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். அதே மாதிரி தான் இந்த தோசையும் ரொம்ப ருசியா இருக்கும் பொதுவா வெயிட் லாஸ் பண்றவங்க சுரைக்காய் பூசணிக்காய் வெள்ளரிக்காய் போன்ற நீர் காய்கறிகளை சாப்பிடணும் அப்படி சாப்பிட பிடிக்கலைன்னா இந்த மாதிரி செஞ்சு கூட தினமும் நீங்க பிரேக்ஃபாஸ்ட்டா சாப்பிடலாம். டின்னர் ஆகவும் எடுத்துக்கலாம். இப்ப வாங்க இந்த சுவையான நீர் காய்கறியான பூசணிக்காய் வச்சு ரவை சேர்த்து ஒரு சூப்பரான மொறுமொறுன்னு இருக்கக்கூடிய பூசணிக்காய் தோசை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
பூசணிக்காய் தோசை | Pumpkin Dosa Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 1 கப் ரவை
- 1 கப் பூசணிக்காய்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் மிளகு
- 2 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு
- 1 துண்டு இஞ்சி
- 1 பச்சை மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- மிக்ஸி ஜாரில் பூசணிக்காய் ரவை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாய் கருவேப்பிலை சீரகம் தட்டிய மிளகு உப்பு கோதுமை மாவு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
- தோசை கல்லில் எண்ணெய் சேர்த்து உங்களுக்கு தேவையான வடிவத்தில் தோசை ஊற்றி மிதமான தீயில் வைத்து வேக வைத்து எடுத்தால் சுவையான பூசணிக்காய் தோசை தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ஏற்ற சுவையான பூசணிக்காய் பொரியல் செய்வது எப்படி ?





