முள்ளங்கி வாங்குனா எப்பவுமே அதுல சாம்பார் இல்ல, புளி குழம்பு இல்லனா முள்ளங்கி பொரியல் அப்படின்னு இந்த மாதிரி தான் செஞ்சிருப்போம். ஆனா முள்ளங்கி வாங்குனா ஒரு தடவை இந்த மாதிரி துவையல் அரைத்து சாப்பிட்டு பாருங்க. இந்த துவையல் முள்ளங்கியை பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுற மாதிரி அவ்ளோ ருசியா இருக்கும். இந்த முள்ளங்கில துவையல் அரைச்சு சாப்பிடுவது யாரும் பெருசாக கேள்விப்படாததாக இருக்கும். ஒரு தடவை முள்ளங்கில துவையல் அரைச்சு சாப்பிட்டு பாருங்க கண்டிப்பா அந்த டேஸ்ட் உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
அதுக்கு முள்ளங்கிய எண்ணெயில் நல்லா வதக்கி துவையல் அரைக்கினும் அப்பதான் முள்ளங்கியோட பச்சை வாசனை வராமல் இருக்கும். இதுகூட சில பொருட்களையும் நல்ல வறுத்து அரைச்சு சுட சுட சாதத்தில் போட்டு நெய் ஊத்தி கூடவே அப்பளம் வச்சு சாப்பிட்டு பாருங்க கண்டிப்பா டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். சுவையான முள்ளங்கி துவையலை நீங்களும் வீட்ல செஞ்சு அசத்துங்க. குழந்தைகளுக்கு இந்த துவையலில் கொஞ்சமா சாதம் போட்டு கிளறி லஞ்ச் பாக்ஸுக்கு சாப்பாடா கொடுத்துவிடலாம். கண்டிப்பா குழந்தைகள் சாப்பிட்டுட்டு டிபன் பாக்ஸ் காலியாக கொண்டு வருவாங்க அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும்.
குழந்தைகளுக்கு கொடுக்கும்போதும் கொஞ்சம் நெய் ஊத்தி பிசைஞ்சு கொடுத்தால் ரொம்ப ரொம்ப நல்லது. முள்ளங்கியை அப்படியே சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மாதிரி துவையலா செஞ்சு கொடுங்க. கண்டிப்பாக குழந்தைகள் சாப்டுவாங்க. முள்ளங்கில துவையல் செஞ்சா எப்படி இருக்கும் அப்படின்னு யோசிக்க வேணாம். கண்டிப்பா ஒரு தடவை செஞ்சு பாருங்க உங்க வீட்ல இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். பருப்பு துவையல் தேங்காய் துவையல் அப்படின்னா செஞ்சு போர் அடிச்சு போயிருந்தீங்கன்னா இந்த மாதிரி ஒரு தடவை முள்ளங்கி துவையல் செஞ்சு பாருங்க. வாங்க இந்த சுவையான முள்ளங்கி துவையல் எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
முள்ளங்கி துவையல் | Radish Thuvayal Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1/4 கி முள்ளங்கி
- 10 சின்ன வெங்காயம்
- 4 பல் பூண்டு
- 8 வர மிளகாய்
- 1 கைப்பிடி கொத்தமல்லி
- 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
- 1 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு
- 1/2 டீஸ்பூன் மல்லி
- 1 டீஸ்பூன் சீரகம்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடலைப்பருப்பு உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சீரகம், மல்லி விதைகள் சேர்த்து வறுத்து ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
- அதே கடாயில் எண்ணெய் சேர்த்து பூண்டு சின்ன வெங்காயம் நறுக்கிய முள்ளங்கி கொத்தமல்லி இலைகள் அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி அதினையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது சுவையான முள்ளங்கி துவையல் தயார் துவையல் அரைக்கும்போது தண்ணீர் சேர்க்க தேவையில்லை.
Nutrition
இதனையும் படியுங்கள் : பிரண்டை துவையல் இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க கால்வலி பறந்து போயிடும்!!