இட்லி தோசைக்கு சைடு டிஷ்ஷா தேங்காய் சட்னி தக்காளி சட்னி புதினா சட்னி, மல்லி சட்னி பூண்டு சட்னி கார சட்னி, சாம்பார் குருமா சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி நிறைய செஞ்சு இருந்தாலும் இந்த அரைச்சு விட்ட தக்காளி குழம்பு ஒரு தடவ செஞ்சு இட்லி தோசைக்கு சைட் டிஷ்ஷா சாப்பிட்டு பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இட்லி தோசைக்கு மட்டுமில்லாமல் சப்பாத்தி பூரிக்கு கூட இந்த தக்காளி குழம்பு ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். பொதுவா எந்த ஒரு குழம்புக்கும் மசாலா அரைச்சு சேர்த்தா அது ஒரு தனி டேஸ்டா இருக்கும் அந்த மாதிரி தான் இந்த ரெசிபியும் ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும். இந்த தக்காளி குழம்பு செய்வது ரொம்ப ரொம்ப ஈஸியான ஒன்று. கஷ்டமே பட தேவையில்லை. வீட்ல இருக்கக்கூடிய பொருட்களை வச்சே சூப்பரா இந்த ரெசிபியை செஞ்சிடலாம்.
தக்காளி விலை இப்போ ரொம்ப ரொம்ப குறைவா தான் இருக்கு அதனால இப்பவே ஒரு தடவை இந்த தக்காளி குழம்பு ரெசிபியை செஞ்சு சுட சுட இட்லி தோசைக்கு சாப்பிட்டு பாருங்க. கண்டிப்பா சூப்பரா இருக்கும் எப்பவுமே ஒரே மாதிரியா இட்லி தோசைக்கு சட்னி சாம்பார் சாப்பிட்டு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி ஒரு தடவை தக்காளி குழம்பு ரெசிபி செஞ்சு பாருங்க தக்காளி குழம்பு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி செய்வாங்க ஆனா இந்த அரைத்து செய்ற தக்காளி குழம்பு ரெசிபி டேஸ்ட் அவ்ளோ அருமையா இருக்கும். கடைசியாக கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கும்போது வீடு மணக்கும் அப்படின்னு சொல்லலாம். இப்ப வாங்க இந்த சுவையான தக்காளி குழம்பு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தக்காளி குழம்பு | Tomato Curry Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 15 சின்ன வெங்காயம்
- 7 தக்காளி
- 6 பல் பூண்டு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் மிளகு
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 டேபிள் ஸ்பூன் மல்லி தூள்
- 1 டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
- 1/2 டீஸ்பூன் வெந்தயம்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- கொத்தமல்லி சிறிதளவு
- 1 பெரிய வெங்காயம்
செய்முறை
- ஒரு கடாயில் சின்ன வெங்காயம் பூண்டு சீரகம், மிளகு, கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- தக்காளியை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும் அதனையும் வதக்கவும். மிளகாய் தூள் மல்லித்தூள் சேர்த்து வதக்கிய பிறகு உப்பு குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
- சிறிதளவு தேங்காய் துருவல் சேர்த்து அதனையும் வதக்கி ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் எண்ணைய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு வெந்தயம் இதற்கு பெரிய வெங்காயம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
- அரைத்த விழுதை ஊற்றி 10 நிமிடம் நன்றாக கொதிக்க வைத்து இறுதியாக கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான தக்காளி குழம்பு தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : கறி குழம்பை மிஞ்சும் அளவுக்கு சுவையான சேனைக்கிழங்கு குழம்பு இதுபோல் செஞ்சி பாருங்கள் சுவை அபாரமாக இருக்கும்!!!