- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
கருணைக்கிழங்கு வச்சு கருணைக்கிழங்கு கார குழம்பு கருணைக்கிழங்கு வறுவல் இதெல்லாம் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஒரு சிலருக்கு கருணைக்கிழங்கு சுத்தமா பிடிக்காது ஆனா ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். கருணைக்கிழங்கு சாப்பிட்டால் நாக்கு அரிக்கும் அப்டின்னு ஒரு சிலர் அதை அப்படியே சாப்பிடாம வச்சுடுவாங்க. ஆனா கருணைக்கிழங்கு வாங்குன உடனே சமைக்காமல் ஒரு வாரம் கழிச்சு அது பழைய கிழங்காக மாறுன உடனே சமைத்து சாப்பிட்டால் நாக்கு அரிக்காது டேஸ்டும் ரொம்ப ரொம்ப அருமையாகவே இருக்கும். இந்த சுவையான கருணைக்கிழங்கு ரோஸ்ட் ரெசிபியை ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க. அதுக்கப்புறமா அடிக்கடி செய்வீங்க.
இந்த கருணைக்கிழங்கு தவா ரோஸ்ட் ரெசிபியை சாம்பார் சாதம் தயிர் சாதம் ரசம் சாதம் எல்லாத்துக்கும் சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். பெரும்பாலும் இந்த கிழங்கு வச்சு கார குழம்பு பொரியல் செஞ்சு சாப்பிட பிடிக்காதவர்களுக்கு இந்த சுவையான கருணைக்கிழங்கு தவா ரோஸ்ட் ரெசிபியை ஒரு தடவை செஞ்சு கொடுத்து பாருங்க. விரும்பி சாப்பிடுவாங்க. யாருக்காவது நீங்க சைவ விருந்து வைத்தால் அதுல இந்த கருணைக்கிழங்கு ரோஸ்ட் ரெசிபியை மெனுவில் சேர்த்துக் கொள்ளலாம். டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும். இந்த ருசியான டேஸ்டான கருணைக்கிழங்கு தவா ரோஸ்ட் ரெசிபியை கண்டிப்பாக ஒரு தடவை செஞ்சு பாருங்க.
இதனையும் படியுங்கள் : உடுப்பி கருணைகிழங்கு வறுவல் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்களேன்! பார்ததாலே நாவில் எச்சி ஊறும்!
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, மைதா மாவு, சோள மாவு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து லேசாக தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.
முக்கோண வடிவில் நறுக்கிய கருணைக்கிழங்கை சேர்த்து மசாலா நன்றாக தடவி தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி கருணைக்கிழங்கை நன்றாக இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்தால் சுவையான கருணைக்கிழங்கு தவா ரோஸ்ட் தயார்.






