பொதுவாக அனைத்து செல்வங்களிலுமே பெரிய செல்வம் என்னவென்றால் நோயற்ற வாழ்வு. பணம் எவ்வளவு தான் சம்பாதித்தாலும் நாம் ஆரோக்கியமாக இல்லை என்றால் நம்மால் அந்த பணத்தை கூட அனுபவிக்க முடியாது எனவே உடல் ஆரோக்கியம் மிகவும் அவசியமானது உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும். ஒருவருக்கு இருக்கக்கூடிய நோய் அவர்களை சுற்றியுள்ள அனைவரையுமே மனதளவில் வருத்தப்பட வைக்கும். மேலும் கர்ம வினைகளின் அடிப்படையில் தான் நமக்கு ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சினைகளும் நிகழும் எனவே பிரச்சனைகளிலிருந்து வெளிவருவதற்கும் நோய்களிலிருந்து குணமாகுவதற்கும் சிவபெருமானை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
பரிகாரம் செய்ய வேண்டிய முறை
இந்த வழிபாட்டிற்கு நமக்கு தேவையானது விபூதி அந்த விபூதி பசுஞ்சாணத்தால் ஆனதாக இருக்க வேண்டும். சிவபெருமானுக்கு உரிய தினங்களாக இருக்கக்கூடிய பிரதோஷம் ஏகாதசி சிவராத்திரி திங்கட்கிழமை போன்ற நாட்களில் இந்த பூஜையை செய்வது நல்லது காலையில் குறைத்து முடித்துவிட்டு பிரம்ம முகூர்த்த நேரத்தில் பூச்சி அருகில் விளக்கு ஏற்ற வேண்டும் சிவபெருமானுக்கு முன்பாக ஒரு தாம்பாளத்தை வைத்து அதன் மேல் வில்வ இலைகளை பரப்பி வைக்க வேண்டும் அந்த வில்வ இலைகளுக்கு மேல் வெற்றிலையும் வைக்க வேண்டும்.
சிவபெருமானுக்கு அர்ச்சனை
அதன் பிறகு சாணத்தால் செய்யப்பட்ட விபூதியை வைத்து ஓம் ருத்ராய நமஹ என்று மந்திரத்தை 108 முறை கூறிக்கொண்டு அந்த வெற்றிலையின் மேல் விபூதியால் செய்ய வேண்டும் ஒவ்வொரு நாளும் அர்ச்சனை செய்த அந்த விபூதியை தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
நோயை குணமாக்கும் விபூதி
பிறகு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த விபூதியை நெற்றியில் வைத்துவிட்டு பிறகு எந்த இடத்தில் அவர்களுக்கு பிரச்சனை இருக்கிறதோ அந்த இடத்தில் விபூதியை வைத்துவிட வேண்டும் மேலும் தண்ணீரில் சிறிதளவு விபூதியை கலந்த அவர்களை குடிக்க சொல்ல வேண்டும். இப்படி செய்யும்போது அந்த விபூதி நோய்க்கான மருந்தாக மாறிவிடும். இதனுடன் உரிய மருத்துவ சிகிச்சையும் எடுக்கும் போது நோய் சீக்கிரத்திலேயே குணமாகும். முழு மனதோடு சிவபெருமானை நினைத்து இந்த வழிபாட்டை செய்து வாருங்கள்.
இதனையும் படியுங்கள் : சிவனை எந்த கிழமையில், எந்த நேரத்தில் வழிபட்டால், என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்!!