- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
எந்த சாதம் சாப்பிட்டாலும் கடைசியாக கொஞ்சமா ரசம் ஊத்தி சாப்பிட்டால் தான் அந்த சாதம் சாப்பிட்டதற்கான ஒரு நிறைவு கிடைக்கும். அந்த வகையில் பல வகையான ரசம் இருக்கிறது தக்காளி ரசம், மிளகு ரசம், புளி ரசம், பருப்பு ரசம் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில் இன்று நாம் சின்ன வெங்காய ரசம் எப்படி செய்வதென்று பார்க்க இருக்கிறோம். இந்த ரசம் ரொம்ப ரொம்ப அட்டகாசமான சுவையில் இருக்கும் சுட சுட சாதத்தில் இந்த ரசத்தை ஊத்தி பிசைந்து சாப்பிடும் போது அவ்வளோ டேஸ்ட்டாக இருக்கும். இதில் நாம் வேகவைத்த பருப்பு எல்லாம் சேர்த்து செய்வதால் ஒரு வித்தியாசமான சுவையில் சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும்.
பொதுவாக நிறைய பேருக்கு குழம்பு சாதம் சாப்பிடுவதை விட ரசம் சாதம் சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும். சின்ன குழந்தைகளுக்கு ரசம் சாதம் என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரி ரச பிரியர்களுக்கு இந்த மாதிரி கொஞ்சம் சூப்பரான சின்ன வெங்காய ரசம் செய்து கொடுத்து பாருங்கள். கண்டிப்பா இந்த ரசம் ரெசிபி ரொம்ப ரொம்ப அட்டகாசமாக இருக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தால் அவர்களுக்கு விருந்து வைக்கும் போது இந்த ரசம் ரெசிபியை செய்து கொடுத்து பாருங்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது சுவையான சின்ன வெங்காய ரசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கத்தரிக்காய் ரசம் செய்வது எப்படி
Ingredients
Method
முதலில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒரு இடி கல்லில் சேர்த்து இடித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின் மஞ்சள் தூள், உப்பு மற்றும் நாம் இடித்து வைத்தூள்ளதை சேர்த்து சிறிது நேரம் வதக்கி வேகவைத்த பருப்பு, புளி தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான சின்ன வெங்காய ரசம் தயார்.






