- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
புடலங்காய் வாங்குனா எப்பவும் ஒரே மாதிரியா பொரியல் கூட்டு அப்படின்னு செய்யாம ஒரு தடவை இந்த புடலங்காய் வைத்து சூப்பரான பிரை ரெசிபி செஞ்சு கொடுத்து பாருங்க. புடலங்காய் வைத்து இந்த ஃப்ரை செஞ்சு பார்த்தா அதுக்கப்புறம் அடிக்கடி இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாப்பிங்க. இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம ஒரு தடவை செஞ்சு பாருங்க இதை ஷேலோ ஃப்ரை பண்ணா தான் சூப்பரா இருக்கும் நிறைய எண்ணெய் ஊத்தி பொரிச்சு எடுக்க கூடாது. சாம்பார் சாதம், பருப்பு சாதம், ரசம் சாதம், புளிக்குழம்பு சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே இந்த ரெசிபி அவ்ளோ ருசியாக இருக்கும்.
இந்த டேஸ்டான ருசியான ரெசிபியை கண்டிப்பாக மிஸ் பண்ணாம ஒரு தடவை செஞ்சு பாருங்க நல்ல மொறு மொறுன்னு சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். புடலங்காய் பிடிக்காதவங்க கூட இந்த மாதிரி ஒரு ரெசிபி செஞ்சு கொடுத்தா கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. மிஸ் பண்ணாம இந்த ரெசிபியை கண்டிப்பா வீட்ல செஞ்சு ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டு பாருங்க. இந்த டேஸ்டான புடலங்காய் ஃப்ரை ரெசிபி கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். புடலங்காய் சாப்பிடுவதால் உடம்புக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் ஆனால் ஒரு சிலருக்கு அது பிடிக்காது அந்த மாதிரி பிடிக்காதவங்க கூட இந்த ரெசிபியை ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த ருசியான புடலங்காய் ஃப்ரை ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கல்யாண வீட்டு புடலங்காய் கூட்டு
Ingredients
Method
புடலங்காயை வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா,சிறிதளவு எண்ணெய் கடலை மாவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பிறகு அரிசி மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தோசை கல்லில் எண்ணெய் சேர்த்து புடலங்காயை சேர்த்து இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்தால் சுவையான புடலங்காய் ஃப்ரை தயார்.






