Advertisement
சைவம்

காரசாரமான புடலங்காய் காரக்குழம்பு ஒரு முறை செய்து விட்டால் இனி அடிக்கடி செய்வீர்கள்!

Advertisement

தென்னிந்திய சமையல்களில் குழும்புகளுக்கு முக்கிய இடம் உண்டு. ஏனென்றால், ஒரு குழம்பில் பல வகைகள் உள்ளன. உதாரணமாக சாம்பாரில் பருப்பு சாம்பார், முருங்கை சாம்பார், முள்ளங்கி சாம்பார் என பல வகைகள் உள்ளன. இதில் ஆச்சரியமான விடயம் என்னெவன்றால் இவை ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான சுவையும், ருசியும் உண்டு.

நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்று இந்த கார குழம்பு. இதை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு மிகவும் எளிதாக இருக்கிற  பொருட்களை வைத்து அட்டகாசமாக இந்த குழம்பு செய்து அசத்தலாம். நம்முடையில் சமையல்களில் மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ள காரக்குழம்பில் பல வகைகள் உள்ளன. கொண்டைக்கடலை, சேனைக்கிழங்கு கார குழம்பு, வெங்காய கார குழம்பு, கத்தரிக்காய் காரக்குழம்பு, முருங்கைக்காய் காரக்குழம்பு,சேப்பக்கிழங்கு காரக்குழம்பு, என சொல்லிக் கொண்டே போகலாம்.

Advertisement

அவற்றை தயார் செய்வது சில சமயத்தில் கடினம் போன்று தோன்றும். ஆனால் அது ரொம்பவும் ஈஸி ஆகும். சூடான சாத்தில் காரக்குழம்பு ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும். அந்த வகையில், சுவையான புடலங்காய் காரக்குழம்பு செய்முறைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

புடலங்காய் காரக்குழம்பு | Snake gourd Kaarakulambu Recipe In Tamil

Print Recipe
நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்று இந்த கார குழம்பு. இதை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு மிகவும் எளிதாக இருக்கிற  பொருட்களைவைத்து அட்டகாசமாக இந்த குழம்பு செய்து அசத்தலாம். நம்முடையில் சமையல்களில் மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ள காரக்குழம்பில் பல வகைகள் உள்ளன.கொண்டைக்கடலை, சேனைக்கிழங்கு கார குழம்பு, வெங்காய கார குழம்பு, கத்தரிக்காய் காரக்குழம்பு, முருங்கைக்காய் காரக்குழம்பு,சேப்பக்கிழங்கு
Advertisement
காரக்குழம்பு, என சொல்லிக் கொண்டேபோகலாம். அந்த வகையில், சுவையான புடலங்காய் காரக்குழம்பு செய்முறைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Snake Gourd Kaarakulambu
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 264

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • புடலங்காய்
  • சின்ன வெங்காயம்
  • தக்காளி
  • தனியாத் தூள்
  • மிளகாய் தூள்
  • மஞசள் தூள்
  • உப்பு
  • புளி
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • நல்லெண்ணை
  • கடுகு
  • கடலை பருப்பு
  • சின்ன வெங்காயம்
  • பூண்டு

அரைப்பதற்கு

  • 1 மூடி தேங்காய்
  • 1 டேபிள் ஸ்பூன் சோம்பு
  • 1/2 டேபிள் ஸ்பூன் கசகசா
  • 5 சாம்பார் வெங்காயம்

Instructions

  • முதலில் புடலங்காயை கழுவி, தோல் சீவி துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பின் வெங்காயம், தக்காளி, பூண்டு என‌ அனைத்தையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, கடலை பருப்பு சேர்த்து பொரிந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் மசாலா பொருட்களை எல்லாம் சேர்த்து நன்கு வதக்கவும். மசாலா வாடை போன்தும் நறுக்கி வைத்துள்ள புடலங்காயை சேர்த்து வதக்கவும்.
     
  • புடலங்காயை வதக்கி கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். அத்துடன் கொஞ்சமாக புளித்தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்.
  • மிக்ஸி ஜாரில் தேங்காய், சோம்பு, கசகசா, சின்ன வெங்காயம், தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
     
  • அரைத்த தேங்காய் விழுதை புடலங்காயில் சேர்த்து கலந்து விடவும்.ஐந்து நிமிங்களுக்கு வேக வைத்து இறக்கினால் சுவையான புடலங்காய் காரக்குழம்பு தயார்.
  • இந்த புடலங்காய் காரக்குழம்பு சாதம், இட்லி,தோசை போன்ற எல்லா உணவுடனும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 264kcal | Carbohydrates: 7g | Protein: 17g | Sodium: 8mg | Potassium: 382mg | Fiber: 8g | Sugar: 0.5g | Vitamin A: 11IU | Vitamin C: 8mg | Iron: 3mg
Advertisement
Prem Kumar

Recent Posts

வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரம்

இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…

46 நிமிடங்கள் ago

மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…

2 மணி நேரங்கள் ago

கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

5 மணி நேரங்கள் ago

கேரளா ஸ்பெஷல் ருசியான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…

5 மணி நேரங்கள் ago

செல்வம் பெருகிக் கொண்டே இருக்க குபேரனை எப்படி வழிபட வேண்டும்

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…

7 மணி நேரங்கள் ago

எளிமையான மற்றும் சுவையான தக்காளி சிக்கன் கறி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள் அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

9 மணி நேரங்கள் ago