- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
மதியம் உணவிற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிக வேலை செய்யாமல் சட்டென்று ஒரு சைடு டிஷ் செய்ய நினைகிறீர்களா? உங்கள் வீட்டில் சோயா உள்ளதா? அப்படியானால் அந்த சோயாவைக் கொண்டு சோயா கறிவேப்பிலை வறுவல் செய்யுங்கள். சோயா வைத்து சோயா பிரியாணி, சோயா கிரேவி, சோயா வறுவல், சோயா மிளகு கிரேவி அப்படின்னு நிறைய ரெசிப்பீஸ் செஞ்சிருப்போம். ஆனால் இன்று நாம் செய்யப்போகிற இந்த சோயா ரெசிபியை ஒரே ஒரு தடவை செய்து பார்த்து விட்டால், போதும் இந்த ரெசிபிக்கு நீங்கள் அடிக்ட் ஆகிடுவீர்கள்.
அந்த அளவுக்கு ஒரு சூப்பரான சிம்பிளான சோயா கறிவேப்பிலை வறுவல் தான் பாக்க போறோம். இந்த சோயா கறிவேப்பிலை வறுவலை சுட சுட சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிடும் போது அவ்ளோ ருசியா இருக்கும் இதுக்கு எந்த சைடு டிஷ்ஷுமே தேவைப்படாது. அதோட இந்த சூப்பரான ரெசிபியை நெய் சாதம், தக்காளி சாதம், புளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதம்னு எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம்.
சாதத்திற்கு மட்டுமல்லாமல் பூரி, சப்பாத்தி, இட்லி, தோசை என அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த சோயா கறிவேப்பிலை வறுவல் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இப்போது சுவையான சோயா கறிவேப்பிலை வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சோயா வைத்து ருசியான நெய் ரோஸ்ட் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் ருசியாக இருக்கும்!!
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் மீல் மேக்கரை சுடு தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து பிழிந்து எடுத்து கொள்ளவும்.
பின் இதனை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் மஞ்சள் தூள், உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அதன்பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் ஊற வைத்துள்ள மீல் மேக்கர் சேர்த்து நன்கு வதக்கவும். பின் உப்பு மற்றும் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும்.
தண்ணீர் சுண்டி நன்கு வெந்து வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான சோயா கறிவேப்பிலை வறுவல் தயார்.






