Advertisement
சைவம்

மட்டன் சுவையில் சோயா கிரேவி செய்வது எப்படி ?

Advertisement

பொதுவாக மட்டனை பயன்படுத்தி நாம் செய்யும் ரெசிபிகளை பிடிக்காது, சாப்பிட மாட்டேன் என்று சொல்பவர்கள் பெரும்பாலும் யாரும் இருக்கவே மாட்டார்கள். ஆனால் நமக்கு சில சமயங்களில் இன்று மட்டன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும் இருந்தாலும் எல்லா நாட்களிலும் அதை செய்து விட முடியாது. செவ்வாய், வெள்ளி மற்றும் விரத நாட்கள் இப்படி பட்ட நாட்களில் அசைவ உணவுகளை நாம் தவிர்த்து விடுவோம். இதுபோன்ற சமயங்களில் உங்களுக்கு இந்த சோயா கிரேவி பெரிதும் உதவியாக இருக்கும்.

இதையும் படியுங்கள் : காரைக்குடி செட்டிநாடு மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி ?

Advertisement

ஆம், சோயாவை பயன்படுத்தி மட்டன் சுவைையில் அற்புதமாக கிரேவி ஒன்று செய்யலாம் அதைப்பற்றி தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். நீங்கள் இப்படி உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று மட்டன் சுவையில் சோயா கிரேவி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

சோயா கிரேவி | Soya Gravy Recipe in Tamil

Print Recipe
நமக்கு சில சமயங்களில் இன்று மட்டன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும் இருந்தாலும் எல்லா நாட்களிலும் அதை செய்து விட முடியாது. செவ்வாய், வெள்ளி மற்றும் விரத நாட்கள் இப்படி பட்ட நாட்களில் அசைவ உணவுகளை நாம் தவிர்த்து விடுவோம். இதுபோன்ற சமயங்களில் உங்களுக்கு இந்த சோயா கிரேவி பெரிதும் உதவியாக இருக்கும் ஆம், சோயாவை பயன்படுத்தி மட்டன் சுவைையில் அற்புதமாக கிரேவி ஒன்று செய்யலாம் அதைப்பற்றி தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். நீங்கள் இப்படி உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
Course Gravy, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword soya, சோயா
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings
Advertisement
5 People
Calories 60

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Ingredients

மிக்ஸயில் அரைக்க

  • 1 துண்டு இஞ்சி
  • 5 பல் பூண்டு
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 பெரிய தக்காளி

சோயா கிரேவி செய்ய

  • 100 கிராம் சோயா
  • 2 tbsp எண்ணெய்
  • 1 பிரியாணி இலை
  • 2 கிராம்பு
  • 1 பட்டை
  • ¼ tbsp சோம்பு
  • 1  பச்சை மிளகாய்
  • அரைத்த விழுது
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 2 மிளகாய் தூள்
  • 1 தனியா துள்
  • ½ tbsp கரம் மசாலா
  • உப்பு தேவையாண அளவு
  • 2 tbsp தயிர்
  • தண்ணீர் தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு 100 கிராம் அளவிலான சோயாவை ஒரு பெரிய பவுளில் சேர்த்து அதனுடன் கொதிக்க வைத்த சூடான நீரை சேர்த்து ஒரு பத்து நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்பு சோயாவை தண்ணீர் இல்லாமல் பிழிந்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து.
    Advertisement
  • அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சோயாவை சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் சோயவை வதக்கி விட்டு ஒரு பவுளில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொண்டு அதில் ஒரு துண்டு இஞ்சி, ஐந்து பல் பூண்டு, இரண்டு பெரிய வெங்காயம் மற்றும் இரண்டு தக்காளி சேர்த்து மையாக அரைத்து கொள்ளவும்.
  • பின்பு மறுபடியும் அதே கடாயில் இரண்டு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் ஒரு பிரியாணி இலை, ஒரு பட்டை, இரண்டு கிராம்பு, கால் டீஸ்பூன் அளவு சோம்பு, ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் ஒரு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
  • பின் நாம் மிக்ஸியில் அரைத்த விழுதையும் கடாயில் சேர்த்து வதக்கி கொள்ளவும். பின் இதனுடன் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு டீஸ்பூன் மிளகாய் தூள், ஒரு டீஸ்பூன் தனியாத்தூள் மற்றும் அரை டீஸ்பூன் கரம் மசாலா சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளுங்கள்.
  • பின் எண்ணெயும் கிரேவியும் தனியாக பிரிந்து வந்ததும் இதனுடைய தேவையான அளவு உப்பு மற்றும் இரண்டு டீஸ்பூன் அளவு தயிர் சேர்த்து நன்றாக கிளறி விட்டு. நாம் வைத்திருக்கும் சோயாவை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறி விட்டவும்.
  • பின் இதனுடன் கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு ஐந்து நிமிடங்கள் கடாயை மூடி விட்டு நன்றாக வேக வைத்து இறக்கி விடுங்கள் அவ்வளவு தான் மட்டன் சுவையில் சோயா கிரேவி இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 300gram | Calories: 60kcal | Carbohydrates: 1g | Protein: 8g | Fat: 0.1g | Saturated Fat: 0.5g | Potassium: 78mg
Advertisement
Prem Kumar

Recent Posts

காலை டிபனுக்கு பக்காவான முள்ளங்கி ஊத்தாப்பம் ஒரு தடவை இப்படி செய்து பாருங்கள்! 2 ஊத்தாப்பம் அதிகமாவே சாப்பிடுவாங்க!

தென்னிந்தியாவை பொறுத்தவரை, இட்லி மற்றும் தோசை என்பது தவிர்க்க முடியாத ஒரு உணவாகும். இதிலும் தோசை என்று எடுத்துக் கொண்டால்…

4 மணி நேரங்கள் ago

சப்பாத்தி, புலவுடன் சாப்பிட ருசியான மஷ்ரூம் பட்டாணி கறி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

காளான் பிரியரா நீங்கள் அல்லது உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அதனை ஒரே மாதிரி சமைத்து போர்…

4 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தால் ஏற்படும் நன்மைகள்

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திருதியை திதியை அட்சய திருதியையாக கொண்டாடுகிறோம். அத்தகைய அட்சய திருதியை அன்று…

5 மணி நேரங்கள் ago

பிரெஞ்ச் ப்ரைஸ் மாதிரி கேரட் ப்ரைஸ் என்று ஒரு தடவை அசத்துங்க!

இப்பலாம் குழந்தைகளுக்கு கடைகளில் கிடைக்கிற பிரெஞ்சு ப்ரைஸ் kfc சிக்கன் ,சிக்கன் ரோல், அப்படின்னா இந்த மாதிரி ஐட்டங்கள் தான்…

7 மணி நேரங்கள் ago

மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான இந்த வாழைப்பழ குழி பணியாரம் செய்து கொடுங்கள் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும்!!

தோசை முதல் இட்லி மற்றும் சாம்பார் வரை தென்னிந்திய உணவு எல்லாமே ஆரோக்கியம் தான். தென்னிந்திய உணவு வகைகளில் பெரும்பாலான…

8 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2024 என்ன பொருள் வாங்கி வைத்து, எந்த முறையில் பூஜை செய்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் ?

இந்தியாவில் இந்துக்கள், ஜயினர்கள் ஆகிய மதத்தினரால் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது அட்சய திருதியை திருநாள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை…

11 மணி நேரங்கள் ago