- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதுவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் சோயா வைத்து ஒரு ரெசிபி செய்யுங்கள். அதுவும் வழக்கமாக செய்வது போன்று வறுவல், பொரியல் என்று செய்யாமல் வித்தியாசமாக புலாவ் செய்யுங்கள். குறிப்பாக சோயாவைக் கொண்டு புலாவ் செய்யும் போது, அந்த ரெசிபி ருசியாக இருப்பதோடு, சத்தானதாகவும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாகவும் இருக்கும்.
ஒரே ஒருமுறை இந்த புலாவ் செய்து கொடுங்கள், நிச்சயம் அடிக்கடி செய்து கொடுக்க சொல்லி கேட்பார்கள் அந்த அளவுக்கு ருசியாக இருக்கும். உங்கள் குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு ஒவ்வொரு நாளும் வித்தியாசமா கலவை சாதம் மாதிரி ஏதாவது செஞ்சி கொடுக்கனும் நினைத்தால் இந்த புலாவ் செய்து கொடுத்து விடுங்கள். குழந்தைகள் டிபன் பாக்ஸை காலி பண்ணிட்டு தான் வீட்டுக்கு கொண்டு வருவாங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பர் டேஸ்டான ரெசிபி.
உங்கள் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்துட்டு நீங்களும் சாப்பிட்டு பாருங்க உங்களுக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். எப்பவும் குழந்தைகளுக்கு ஒரே மாதிரியா தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் என்று செய்து கொடுக்காமல் அவ்வப்போது சற்று வித்தியாசமாக அவர்களுக்கு இந்த ரெசிபியை செய்து கொடுக்கலாம். இப்போது சுவையான சோயா மசாலா புலாவ் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் சோயா கட்லெட் செய்வது எப்படி?
Ingredients
Method
முதலில் சோயாவை நன்கு ஊறவைத்த தண்ணீர் பிழிந்து, மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் இதனை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, கடலை மாவு, மிளகாய் தூள், மிளகு தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து காய்ந்ததும் நாம் செய்து வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து சிறிது வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு ஏலக்காய், மிளகு, காய்ந்த மிளகாய் சேர்த்து அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.
பின் மிளகு தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள், தயிர் சேர்த்து நன்கு வதக்கவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு ஒரு கொதி விடவும்.
பின் ஒரு கொதி வந்ததும் நாம் செய்து வைத்துள்ள உருண்டைகளை அதன்மேல் சேர்த்து மூடி வைத்து வேக விடவும். இவை நன்கு வெந்து வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான சோயா மசாலா புலாவ் தயார்.






