- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 3
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
சோயா வச்சு கிரேவி செஞ்சிருப்பீங்க வறுவல் செஞ்சுருப்பீங்க சோயா 65 செஞ்சிருப்பீங்க. ஆனா சோயா வச்சு இந்த மாதிரி ஒரு சூப்பரான டேஸ்டான சோயா ரைஸ் ஒரு தடவ செஞ்சு பாருங்க அவ்ளோ ருசியாக இருக்கும். குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு எப்பவும் ஒரே மாதிரியா ஃப்ரைடு ரைஸ், எக் ரைஸ், வெஜிடபிள் ரைஸ், தக்காளி சாதம், புளி சாதம் இந்த மாதிரியே செஞ்சு கொடுத்து போர் அடிச்சு போச்சு அப்படின்னா வித்தியாசமா இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சு கொடுத்து பாருங்க.
இதுக்கு நம்ம சின்ன மசாலா அரைச்சு செய்ய போறோம் இஞ்சி பூண்டு மிளகு சோம்பு எல்லாமே சேர்த்து கொரகொரப்பா அரைச்சு சேர்த்து இந்த ரைஸ் செய்யும்போது அவ்ளோ மணமாக இருக்கும். ஒரே ஒரு தடவை இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி இந்த ரெசிபியை செய்வீங்க. இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா குழந்தைகளுக்கு செஞ்சு கொடுத்து அசத்துங்க. குழந்தைகள் மட்டுமில்லாம வீட்ல இருக்கக்கூடிய பெரியவர்களும் இந்த ரெசிபியை ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.
மசாலா குறைவாக சேர்த்து இந்த ரெசிபியை செய்யலாம். மிளகு கொஞ்சம் அதிகமாக சேர்ப்பதால் சளி இருமல் இருந்தா கூட அது சரியாகிவிடும். இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம ஒரே ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. இதுக்கு பெரிய சோயா பயன்படுத்தலாம் இல்ல உங்களுக்கு சின்ன சோயா பிடிக்கும் அப்படின்னா அதுவும் பயன்படுத்தி செய்யலாம். இந்த டேஸ்டான ரெசிபியை எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.
Ingredients
Method
முதலில் சோயாவை நன்றாக கழுவி சுடுதண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் என்னை சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு சீரகம், பூண்டு, இஞ்சி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து அதையும் சேர்த்து வதக்கவும்.
பிறகு மிளகாய் தூள் மல்லி தூள் கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
சோயாவை சேர்த்து நன்றாக கலந்து கறிவேப்பிலை கொத்தமல்லி இலைகள் போட்டு எண்ணெயிலேயே பத்து நிமிடம் வதக்கவும்.
பிறகு வடித்து வைத்துள்ள பாஸ்மதி அரிசி சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் சுவையான சோயா ரைஸ் தயார்.






