- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
தென்னிந்தியா முழுவதும் பிரபலமான ஒரு பாரம்பரிய மற்றும் ஆரோக்கியமான காலை உணவு இட்லி. இட்லி தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் பிரபலமான காலை உணவுத் தேர்வாகும். அது மட்டுமல்லாமல் சிறுவர்கள் முதல் வயது முதிந்தோர் வரை விரும்பி உண்ணும் உணவாகவும் இட்லி உள்ளது. அந்த வகையில் இன்று காலையும் உங்கள் வீட்டில் இட்லி செய்ய போகிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரியா இல்லாமல் காலை வேளையில் அலுவலகத்திற்கு செல்லும் நேரத்தில், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையிலும், சற்று வித்தியாசமானதாகவும் சமைக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டிலேயே எளிதில் சூப்பரா மற்றும் வித்தியாசமான சுவையில் ஒரு ஸ்பாட் இட்லி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
எப்போதும் செய்யும் இட்லி போல் இல்லாமல் சின்ன சின்ன இட்லியாக ஸ்பாட் இட்லி செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த இட்லி பஞ்சு போல் மிருதுவாக இருப்பதோடு, செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். இந்த ரெசிபி காலை மற்றும் இரவு உணவுக்கு சரியான தேர்வாக அமையும். இல்லையெனில் மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியோடு வரும் குழந்தைகளுக்கு இந்த ரெசிபியை செய்து கொடுங்கள் ரொம்ப குஷி ஆகிடுவார்கள். இப்போது சுவையான ஸ்பாட் இட்லி எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : இட்லி மஞ்சூரியன்
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் அதே கடாயில் வெண்ணெய் மற்றும் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு வதக்கி கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
ஒரு தவாவை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து வதக்கி வைத்துள்ள வெங்காயத்தை சிறிதளவு எடுத்து தவாவில் வைத்து அதன் மேல் ஒரு கரண்டி இட்லி மாவை ஊற்றி அதன்மேல் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சிறிதளவு தூவி, மற்றொரு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்.
இப்படி அனைத்து மாவையும் இட்லி செய்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான ஸ்பாட் இட்லி தயார்.






