- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Appetizer
நம்ம காளான் சூப் மட்டன் சூப் சிக்கன் சூப் வெஜிடபிள் சூப் கீரை சூப் நண்டு சூப் அப்படின்னு நிறைய சூப் வகைகள் குடிச்சி இருப்போம். அது எல்லாமே ரொம்ப ஆரோக்கியமானது மட்டுமில்லாமல் ரொம்ப டேஸ்டாவும் இருக்கும். பொதுவாவே நம்ம உடம்புல அதிகமான புரோட்டின்ஸ் சேர்த்துக்கறதுக்கு பயறு வகைகளை சாப்பிட சொல்லுவாங்க.
பயறு வகைகள் சாப்பிடுவது நம் உடம்புக்கு ரொம்பவே நல்லது. தினமும் நம்ம ஏதாவது ஒரு வகையான பயிர் சாப்பிட்டாலே நம்ம உடம்புல நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமா ஆகிடும். அந்த அளவுக்கு நிறைய சத்துக்கள் இருக்கக்கூடிய பயறுகள்ல நம்ம சூப் செய்ய போறோம். வெறும் வயிறு சாப்பிடுவதை விட அதை முளைகட்டி வைத்து சாப்பிட்டால் இன்னும் ரொம்ப சத்தானது என்று சொல்லுவாங்க.
அந்த வகையில இப்போ முளைகட்டிய நவதானியங்கள வச்சு தான் நம்ம சூப் செய்ய போறோம். குறைந்தது வாரத்துக்கு ஒரு முறையாவது இந்த முளைகட்டிய நவதானிய சூப் குழந்தைகளுக்கு செஞ்சு கொடுக்கிறது மூலமா அவர்களுக்கு பலவகையான சத்துக்கள் கிடைக்கும். குழந்தைகளை நீங்க ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போக அவசியமே வராது. ஏன்னா இந்த பயிறு வகைகள் சூப்ப குடிச்சா குழந்தைகளுக்கு எல்லா வகையான சத்துக்களும் கிடைச்சிரும் எந்த வகையான நோய் நொடிகளும் அண்டாது. இவ்வளவு சத்தான முளைகட்டிய நவதானிய சூப் எப்படி செய்யறதுன்னு வாங்க பார்க்கலாம்
இதையும் படியுங்கள் : மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான பச்சை பயறு பணியாரம் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
Ingredients
Method
முதலில் ஒரு குக்கரில் முளைகட்டிய பயிர்களை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து மூன்று விசில் விட்டுஎடுத்துக் கொள்ளவும்
ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம் பூண்டு தனியா சீரகம் மிளகு கொத்தமல்லி இலைகள் , சிறிதளவு வேக வைத்த பயறுகள் அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
பிறகு மீதி இருக்கும் வேகவைத்த பயறுகளை சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பும் சேர்த்து கொதிக்க விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து தேங்காய் பால் ஊற்றி 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
இறுதியாக சூப்புடன் சிறிதளவு கெட்டியான தயிர் கொத்தமல்லி இலைகள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறினால் சுவை அருமையாக இருக்கும்.






