- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- sri lanka
- Course
- Side Dish
உங்கள் வீட்டில் சப்பாத்தி அதிகம் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு கொண்டு அடிக்கடி சைடு டிஷ் செய்வீர்களா? அதுவும் ஒரே சுவையில் தான் சைடு டிஷ்ஷை செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் உருளைக்கிழங்கு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் அடுத்தமுறை இலங்கை ஸ்டைலில் உருளைக்கிழங்கு கறி செய்யுங்கள். இந்த கறி மிகவும் டேஸ்டியாக இருக்கும். முக்கியமாக இப்படி உருளைக்கிழங்கு சைடுடிஷ்ஷை செய்யும் போது வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.
அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கை கொண்டு வீட்டில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அசத்தல் சுவையில் எவ்வாறு இலங்கை உருளைக்கிழங்கு கறி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். இந்த உருளைக்கிழங்கு கறி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். இந்த ருசியான உருளைக்கிழங்கு கறியை சில நிமிடங்களில் சுலபமாக செய்திடலாம். இந்த கறி சாப்பிடுவதற்கு வித்தியாசமான சுவையில் ரொம்பவே சூப்பரா இருக்கும். இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான இலங்கை உருளை கறி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : உருளை கிழங்கு சாதம் செய்வது எப்படி
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கடுகு சேர்த்து வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெந்தயம், பட்டை, ரம்பை இலை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி பின் சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
பின் தண்ணீர் நன்கு கொதித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இவை நன்கு கொதித்ததும் நாம் சேர்த்த ரம்பை இலையை வெளியே எடுத்துவிட வேண்டும்.
அதன்பிறகு 1 கப் தேங்காய் பால், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அதனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து வேக விடவும்.
பின் உருளைக்கிழங்கு சிறிது வெந்ததும் மற்றொரு 1 கப் தேங்காய் பால் சேர்த்து மூடி ஐந்து நிமிடங்கள் வைத்து கொதிக்க விடவும். பின் நாம் அரைத்து வைத்துள்ள கடுகு பொடியை சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான இலங்கை உருளை கறி தயார்.






