வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு கஷ்டமான சூழ்நிலை ஏற்படும். அந்த நேரத்தில் ஏதாவது ஒரு முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும். அந்த முடிவை எடுக்க முடியாமல் பலவிதமான குழப்பத்துடன் இருப்போம் சரியான முடிவை எடுத்து விட்டால் நல்லது நடக்கும் இல்லை என்றால் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகள் உண்டாகும். அதனால் பலரும் இப்படிப்பட்ட சூழ்நிலை வரும்பொழுது மனக்குழப்பத்தில் ஆழ்ந்து இருப்பார்கள். அந்த சமயத்தில் பின்பற்ற வேண்டிய ஒரு வழிபாட்டு முறையை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

தெளிவான முடிவு
வாழ்க்கையில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள் இருக்கும் அப்படி இருக்கும் போது குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது. இந்த வழிபாட்டை நாம் செய்வதன் மூலம் நம்முடைய மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கும் தெளிவான முடிவை எடுத்து சரியாக நடந்து கொள்ளவும். நமக்கு வழி கிடைக்கும் அப்படிப்பட்ட ஒரு குலதெய்வ இஷ்ட தெய்வ வழிபாட்டை பற்றி பார்க்கலாம்.
நட்சத்திர கோலம் வழிபாடு
இந்த வழிபாட்டை செய்வதற்கு முதலில் வீட்டு பூஜை அறையில் தரையை சுத்தம் செய்து பச்சரிசி மாவினால் 6 நட்சத்திரங்களை ஒன்றுக்கு பக்கத்தில் மற்றொன்று என்ற வீதத்தில் வரிசையாக போட்டுக் கொள்ளுங்கள். இந்த நட்சத்திரத்திற்கு நடுவே ஆறு அகல் விளக்கு வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் போட்டு கொள்ள வேண்டும். இந்த தீபம் கிழக்கு திசை பார்த்தவாறு இருக்க வேண்டும். பிறகு உங்களுடைய குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் மனதார நினைத்துக் கொண்டு தீபச்சுடரை பார்த்து உங்களுடைய பிரச்சினைகளை கூற வேண்டும். உங்களுக்கு எப்பொழுதெல்லாம் மனதில் குழப்பங்கள் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் இந்த வழிபாட்டை நாம் செய்யலாம். முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திர கோளத்தை போட்டு இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் மனதிற்கு நிம்மதி கிடைக்கும் அதனால் தெளிவான முடிவையும் நம்மால் எடுக்க முடியும். வீட்டு பூஜை அறையில் இந்த கோலத்தை போட முடியவில்லை என்றால் ஒரு வெள்ளை நிற பேப்பர் எடுத்து அதில் 54 முறை நட்சத்திரங்களை வரிசையாக வரைந்து கொள்ள வேண்டும். பிறகு உங்களுடைய இஷ்ட தெய்வம் அல்லது குலதெய்வத்தின் பெயரை அந்த நட்சத்திரத்திற்கு நடுப்பகுதியில் எழுதி சந்தன குங்குமம் பொட்டு வைத்து மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த வழிபாட்டை செய்து முடித்த பிறகு நீங்கள் செய்யக்கூடிய எந்த காரியத்திலும் தடைகள் வராது. முருகப்பெருமானுக்கு மட்டும் தான் நட்சத்திரம் உகந்தது என்று கிடையாது அனைத்து தெய்வங்களுக்குமே நட்சத்திரம் உகந்தது தான் எனவே தாராளமாக இந்த வழிபாட்டை செய்து மனக்குழப்பத்திலிருந்து வெளியே வரலாம்.
இதனையும் படியுங்கள் : அஷ்ட தச பூஜை துர்க்கை அம்மன் வழிபாடு




