ஆவியில் வேக வைத்த உணவான இட்லி நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. நம் வீடுகளில் பெரும்பாலும் காலை உணவாகவும் இரவு உணவாகவும் சாப்பிடுவது இட்லி, தோசை தான். மற்ற உணவுகளை விட இட்லி தோசையை தான் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். ஆனால் இந்த இட்லி தோசைக்கல் என்ன சைடிஷ் செய்வது என்று எப்பொழுதுமே ஒரே குழப்பமாக இருக்கும்.
அதேபோல் வெறும் இட்லியையே சாப்பிட்டு சிலருக்கு சலித்து போய் இருக்கக்கூடும். அவர்களுக்காகவே மிகவும் சத்தான முறையில் காய்கறிகள் வைத்து செய்யக்கூடிய ஒரு இட்லியை பார்க்க போகிறோம். இந்த இட்லிக்கு சைடிஷ் எதுவுமே தேவைப்படாது அப்படியே சாப்பிடலாம் அந்த அளவிற்கு மிகவும் சுவையானதாக இந்த ஸ்டஃப்டு இட்லி இருக்கும். உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை இந்த இட்லியுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த இட்லியை செய்வதும் கூட மிகவும் சுலபம்தான். எளிமையான முறையில் செய்யக்கூடிய ஆவியில் வேக வைத்த இந்த இட்லியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் சாப்பிட்டால் இதயத்திற்கு எந்த பாதிப்பும் வராது. எண்ணெயில் சமைத்த உணவுகளை விட ஆவியில் வேகவைத்த உணவுகளே நமக்கு மிகவும் ஆரோக்கியம் தரக்கூடியவைகள். இந்த ஸ்டஃப்டு இட்லிகளை நாம் குழந்தைகளின் லன்ச் பாக்ஸ் இருக்கும் கொடுத்து விடலாம் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்படி எண்ணற்ற நன்மைகள் நிறைந்த இந்த ஸ்டஃப்டு இட்லியை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
ஸ்டஃப்டு இட்லி | Stuffed Idly Recipe In Tamil
Equipment
- 1 பெரிய பவுள்
- 1 இட்லி பாத்திரம்
தேவையான பொருட்கள்
- இட்லி மாவு தேவையான அளவு
- காலிபிளவர் தேவையான அளவு
- 1 உருளைக்கிழங்கு
- 1 துண்டு இஞ்சி
- 4 பச்சை மிளகாய்
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
- 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் காலிஃப்ளவரையும் உருளைக்கிழங்கையும் துருவி எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளவும்.
- பிறகு இஞ்சியை துருவி சேர்த்துக் கொள்ளவும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் துருவிய உருளைக்கிழங்கு மற்றும் காலிஃப்ளவரை சேர்த்து கிளறவும்.
- மிளகாய் தூள் கரம் மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்து தேவையான அளவிற்கு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும். காய்கறிகள் அனைத்தும் நன்றாக வெந்தவுடன் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கிவிடவும்.
- இப்பொழுது இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும் இட்லி தட்டில் சிறிதளவு மாவு ஊற்றி தம் கலந்து வைத்துள்ள காய்கறி கலவை யிலிருந்து கொஞ்சம் எடுத்து அதில் சேர்க்கவும் அதன் மேல் மறுபடியும் சிறிதளவு மாவை ஊற்றி 15 நிமிடங்கள் நன்றாக இட்லியை வேக வைக்கவும்.
- இப்பொழுது சுவையான ஸ்டஃப்டு இட்லி தயார்.
Nutrition
இதையும் படியுங்கள் : பூரி, சப்பாத்திக்கு இனி பஞ்சாபி ஆலு மேத்தி இப்படி செய்து பாருங்க! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!