- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
பச்சை காய்கறியான வெண்டைக்காய் நம்ம உடம்புக்கு ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான ஒரு காய் அப்படின்னு சொல்லலாம். இந்த வெண்டைக்காயை வைத்து வெண்டைக்காய் கார குழம்பு வெண்டைக்காய் புளி கூட்டு வெண்டைக்காய் ஃப்ரை வெண்டைக்காய் பொரியல் அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செய்யலாம் ஒவ்வொன்றும் ஒவ்வொருத்தவங்களுக்கு ரொம்ப ரொம்ப ஃபேவரட்டா இருக்கும். அந்த வகையில நம்ம இதுவரைக்கும் செஞ்சு பார்க்காத ஒரு அருமையான வித்தியாசமான வெண்டைக்காய் ஃப்ரை தான் இன்னைக்கு நம்ம பாக்க போறோம்.
இந்த வெண்டைக்காய் ஃப்ரை ரசம் சாதம் தயிர் சாதம் புளி சாதம் லெமன் சாதம் வைத்து சாப்பிடலாம் சாம்பார் சாதத்துக்கு இந்த வெண்டைக்காய் பிரை வைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். இந்த வெண்டைக்காய் ஃப்ரை செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி தான். இந்த வெண்டைக்காய் குள்ள ஸ்டஃப் பண்றதுக்கு ஒரு மசாலா மட்டும் தயார் செஞ்சுட்டா போதும் ரொம்ப சீக்கிரத்துல இந்த வெண்டைக்காய் ஃப்ரை செஞ்சு முடிச்சிடலாம். ருசியும் ரொம்பவே அருமையா இருக்கும். இப்ப வாங்க இந்த அட்டகாசமான ஸ்டஃப்டு வெண்டைக்காய் ஃப்ரை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வெண்டைக்காய் பால்கறி இப்படி செஞ்சு பாருங்க, ஒரு குன்டான் சாதம் இருந்தாலும் பத்தாது!
Ingredients
Method
வெண்டைக்காயை கழுவி சுத்தம் செய்து வெண்டைக்காயின் நடுவே கத்தியால் கீறி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் கடலைமாவை சேர்த்து வாசனை வரும் வரை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன் மிளகாய் தூள் காஷ்மீர் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சீரகத்தூள் சோம்பு தூள் மல்லித்தூள் கரம் மசாலா மாங்காய் பொடி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
எலுமிச்சைச்சாறு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து உதிரி உதிரியாக நன்றாக மசாலாக்களை கலந்து வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது இந்த மசாலாவை கீறி வைத்துள்ள வெண்டைக்காய்க்குள் அழுத்தி வைத்து கொள்ளவும்.
கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சீரகம் போட்டு தாளித்து மசாலா சேர்த்துள்ள வெண்டைக்காயை போட்டு எண்ணெயிலேயே நன்றாக ப்ரை செய்து எடுத்தால் சுவையான ஸ்டஃப்டு வெண்டைக்காய் ஃப்ரை தயார்.






