இனி சுரைக்காய் வாங்கினால் ருசியான பொரியல் இப்படி செய்து கொடுத்து பாருங்கள்! சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்!

- Advertisement -

உங்களுக்கு எப்போதும் ஒரே கூட்டு சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் புதுவிதமான கூட்டு செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடுங்கள். காய்கறி வகைகளில் விதவிதமான காய்கறிகள் உண்டு. அதில் சுரைக்காயும் ஒன்று! அதிலும் சுரைக்காய் கூட்டு செய்து சுவையுங்கள். இது செய்வதற்கு மிகவும் ஈஸியானது மட்டுமின்றி, நீர்ச்சத்து நிறைந்த காய்கறி என்பதால் ஆரோக்கியமானதும் கூட. இதில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. ஆனால் இதை அடிக்கடி யாரும் சமைப்பது கிடையாது. சுரைக்காய் நீர்க்காய் என்பதால் உடலில் நீர் சத்து அதிகரித்து, உடல் உஷ்ணத்தை தணிக்க கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. அசத்தலான சுரைக்காய் பொரியல் இப்படி செஞ்சா இனி அடிக்கடி இந்த காயை வாங்க நீங்களும் ஆரம்பிச்சிடுவீங்க! சுரைக்காய் பொரியல் சத்துகள் மிகுந்ததும் கூட.

-விளம்பரம்-

குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகரிக்க சுரைக்காய் கூட்டு கொடுப்பதுண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை சாப்பிடலாம். உடலை பலமாக்கி, தொப்பையைக் குறைக்கும் தன்மை சுரைக்காய்க்கு இருப்பதாகவும் உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். கோடையில் சுரைக்காய் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் சுரைக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே சுரைக்காயை பொரியல் செய்து கோடையில் சாப்பிடுவது மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு லன்ச்க்கு இது போன்று பொரியல் செய்து சாதத்துடன் கிளறி கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். உடலுக்கும் ஆரோக்கியமான உணவு. மேலும் இது செய்வது மிகவும் எளிது. அதிலும் மதிய வேளையில் சாம்பார் மற்றும் சுரைக்காய் பொரியலை செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான்.

- Advertisement -
Print
5 from 1 vote

சுரைக்காய் பொரியல் | Suraikkai Poriyal Recipe In Tamil

உங்களுக்கு எப்போதும் ஒரே கூட்டு சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் புதுவிதமான கூட்டு செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடுங்கள். காய்கறி வகைகளில் விதவிதமான காய்கறிகள் உண்டு. அதில் சுரைக்காயும் ஒன்று! அதிலும் சுரைக்காய் கூட்டு செய்து சுவையுங்கள். இது செய்வதற்கு மிகவும் ஈஸியானது மட்டுமின்றி, நீர்ச்சத்து நிறைந்த காய்கறி என்பதால் ஆரோக்கியமானதும் கூட. இதில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. ஆனால் இதை அடிக்கடி யாரும் சமைப்பது கிடையாது. சுரைக்காய் நீர்க்காய் என்பதால் உடலில் நீர் சத்து அதிகரித்து, உடல் உஷ்ணத்தை தணிக்க கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. அசத்தலான சுரைக்காய் பொரியல் இப்படி செஞ்சா இனி அடிக்கடி இந்த காயை வாங்க நீங்களும் ஆரம்பிச்சிடுவீங்க! சுரைக்காய் பொரியல் சத்துகள் மிகுந்ததும் கூட. மேலும் இது செய்வது மிகவும் எளிது. அதிலும் மதிய வேளையில் சாம்பார் மற்றும் சுரைக்காய் பொரியலை செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Suraikkai Poriyal
Yield: 4 People
Calories: 14kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 குக்கர்
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 1 சிறிய சுரைக்காய்
  • 1/2 கப் சின்ன வெங்காயம்
  • உப்பு தேவையான அளவு
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/4 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
  • 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • கொத்தமல்லி தழை சிறிதளவு

அரைக்க :

  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 2 வர ‌மிளகாய்
  • 1 டீஸ்பூன் மல்லி
  • 2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை

செய்முறை

  • முதலில் சுரைக்காயை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் மல்லி, சீரகம், வரமிளகாய் சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.
  • பின் அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
  • பின் வெங்காயம் சேர்த்து வதக்கி சுரைக்காய், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து ஒரு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
  • பின் குக்கரை திறந்து நாம் அரைத்து வைத்துள்ள பொடி, தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான சுரைக்காய் பொரியல் தயார்.

Nutrition

Serving: 450g | Calories: 14kcal | Carbohydrates: 3.39g | Protein: 3.62g | Fat: 1.02g | Sodium: 2mg | Potassium: 150mg | Fiber: 1.3g | Vitamin C: 10.1mg | Calcium: 26mg | Iron: 3.2mg

இதனையும் படியுங்கள் : சூப்பரான சுரைக்காய் தோசை கமகமனு எப்படி வீட்ல எப்படி செய்வது? முழு ரெசிபி இதோ?