உங்களுக்கு எப்போதும் ஒரே கூட்டு சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் புதுவிதமான கூட்டு செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடுங்கள். காய்கறி வகைகளில் விதவிதமான காய்கறிகள் உண்டு. அதில் சுரைக்காயும் ஒன்று! அதிலும் சுரைக்காய் கூட்டு செய்து சுவையுங்கள். இது செய்வதற்கு மிகவும் ஈஸியானது மட்டுமின்றி, நீர்ச்சத்து நிறைந்த காய்கறி என்பதால் ஆரோக்கியமானதும் கூட. இதில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. ஆனால் இதை அடிக்கடி யாரும் சமைப்பது கிடையாது.
சுரைக்காய் நீர்க்காய் என்பதால் உடலில் நீர் சத்து அதிகரித்து, உடல் உஷ்ணத்தை தணிக்க கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. அசத்தலான சுரைக்காய் பொரியல் இப்படி செஞ்சா இனி அடிக்கடி இந்த காயை வாங்க நீங்களும் ஆரம்பிச்சிடுவீங்க! சுரைக்காய் பொரியல் சத்துகள் மிகுந்ததும் கூட. குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகரிக்க சுரைக்காய் கூட்டு கொடுப்பதுண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை சாப்பிடலாம். உடலை பலமாக்கி, தொப்பையைக் குறைக்கும் தன்மை சுரைக்காய்க்கு இருப்பதாகவும் உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
கோடையில் சுரைக்காய் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் சுரைக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே சுரைக்காயை பொரியல் செய்து கோடையில் சாப்பிடுவது மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு லன்ச்க்கு இது போன்று பொரியல் செய்து சாதத்துடன் கிளறி கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். உடலுக்கும் ஆரோக்கியமான உணவு. மேலும் இது செய்வது மிகவும் எளிது. அதிலும் மதிய வேளையில் சாம்பார் மற்றும் சுரைக்காய் வேர்க்கடலை பொரியலை செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான்.
சுரைக்காய் வேர்க்கடலை பொரியல் | Surakkai Verkadalai Poriyal Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 சுரைக்காய்
- எண்ணெய் தேவையான அளவு
- 1 கொத்து கறிவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 5 பல் பூண்டு
- 4 வர மிளகாய்
- 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 கப் வேர்க்கடலை
செய்முறை
- முதலில் சுரைக்காயை தோலை சீவி, விதைகளை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து வேர்க்கடலை, வர மிளகாயை மற்றும் பூண்டு சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- இவை நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் நறுக்கி வைத்துள்ள சுரைக்காயை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
- பின் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி சிறிதளவு தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
- பின் தண்ணீர் வற்றி சுரைக்காய் வெந்ததும் பொடித்து வைத்துள்ள வேர்க்கடலையை சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான சுரைக்காய் வேர்க்கடலை பொரியல் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் :உடல் வெப்பத்தையும் தணிக்க சுரைக்காய் தயிர் கிரேவி இப்படி ஒருமுறை செய்து பாருங்க!