அனைத்து மதத்தினரும் அவரவர்களுக்கு பிடித்த மாதிரியான சுவாமி படங்களை அவர்களின் வீட்டு பூஜை அறையில் வைப்பது வழக்கம். ஆனால் இந்துக்கள் அவர்களுடைய பூஜை அறையில் நிறைய சுவாமி படங்களை வைத்திருப்பார்கள். கோவிலுக்கு செல்கிறோமோ இல்லையோ வீட்டில் உள்ள பூஜை அறையில் இருக்கின்ற அனைத்து தெய்வங்களின் உருவப்படத்திற்கும் பூ வைத்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம் ஆனால் நம் வீட்டு பூஜை அறையில் ஒரு சில படங்களை வைத்து வழிபடக்கூடாது என்று கூறுவார்கள் அதிலும் இறந்த முன்னோர்களின் படத்தை பூஜை அறையில் வைத்து வழிபடக்கூடாது என்ற ஒரு ஐதீகம் உள்ளது அந்த வகையில் வீட்டின் பூஜை அறையில் ஒரு சில சுவாமி படங்களை வைப்பதால் நம் வீட்டிற்கு நல்லது கிடையாது அந்த வகையில் வீட்டில் பூஜை அறையில் வைக்க கூடாத ஒரு சில சுவாமி படங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

வீட்டின் பூஜை அறையில் வைக்க கூடாத சுவாமி படங்கள்
நவகிரகங்களின் படத்தை வீட்டின் பூஜை அறையில் பூஜைக்காக பயன்படுத்தக் கூடாது.
சனீஸ்வர பகவானுடைய உருவப்படத்தை ஒருபோதும் வீட்டில் வைக்கக் கூடாது
மிகவும் கொடூரமான பார்வை கோபமாக தலைவிரி கோலங்களில் உள்ள நம்பிக்கை படங்கள் ருத்ர தாண்டவம் ஆடும் சிவபெருமானுடைய படம் போன்றவற்றை வீட்டின் பூஜையறையில் வைக்கக்கூடாது.

சக்தியின் உருவத்துடன் இல்லாத நடராஜரின் படத்தையும் பூஜை அறையில் வைக்க கூடாது
காளி மட்டும் தனியாக உள்ள திருவுருவப்படத்தையும் வீட்டின் பூஜை அறையில் வைப்பது நல்லது கிடையாது
காலகண்டன் படமும் வீட்டிற்கு ஆகாது
தலைக்கு மேல் உயர்ந்து இருக்கும் வேல் கொண்ட முருகப்பெருமானின் படத்தையும் வீட்டில் வைக்கக் கூடாது
கோவணம் கட்டிய மொட்டை தலையுடைய தண்டாயுதபாணியின் படத்தையும் வீட்டின் பூஜை அறையில் ஒருபோதும் வைக்கக்கூடாது





