Advertisement
ஸ்வீட்ஸ்

பாரம்பரிய சக்கரை பொங்கல் இப்படி செய்து பாருங்க!

Advertisement

தமிழ் நாட்டில் கொண்டாடப்படும் ஒரு மிகச்சிறப்பான பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. இந்த பொங்கல் பண்டிகையின் சிறப்பு என்னவென்றால் வெள்ளம், மற்றும் பச்சரிசியைக் கொண்டு செய்யப்படும் பொங்கல் தான் இந்த சர்க்கரை பொங்கல்.

இந்த பொங்கலை ஒவொருவர் ஒவொரு விதமாக செய்வார்கள். ஆனால் இந்த சமையல் குறிப்பு பார்ப்பரிய முறை எப்படி சர்க்கரை பொங்கல் செய்வது என்று தான் பார்க்க போகிறோம்.

Advertisement

கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் பொங்கல் திருநாளன்று தித்திக்கும் சுவையில் இந்த பொங்கலை செய்து கொண்டாடுங்கள்.

சர்க்கரை பொங்கல் | Sweet Pongal Recipe In Tamil

Print Recipe
தமிழ் நாட்டில் கொண்டாடப்படும் ஒரு மிகச்சிறப்பான பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. இந்த பொங்கல் பண்டிகையின் சிறப்பு என்னவென்றால் வெள்ளம், மற்றும் பச்சரிசியைக் கொண்டு செய்யப்படும் பொங்கல் தான் இந்த சர்க்கரை பொங்கல்.
இந்த பொங்கலை ஒவொருவர் ஒவொரு விதமாக செய்வார்கள். ஆனால் இந்த சமையல் குறிப்பு பார்ப்பரிய முறை எப்படி சர்க்கரை பொங்கல் செய்வது என்று தான் பார்க்க போகிறோம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் பொங்கல் திருநாளன்று தித்திக்கும் சுவையில் இந்த பொங்கலை செய்து கொண்டாடுங்கள்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword sweet pongal, சர்க்கரை பொங்கல்
Prep Time 5 minutes
Cook Time 25 minutes
Total Time 30 minutes
Servings 4 people

Equipment

  • 1 பொங்கல் பானை
  • 1 கடாய்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • 1 கப் பொன்னி அரிசி
  • ½ கப் பாசிப்பருப்பு
  • ½ கப் பால்
  • 1 ஸ்பூன் கடலை பருப்பு
  • 2 கப் பொடிச்ச வெல்லம்
  • ¼ ஸ்பூன் ஏலக்காய் பொடி
  • ¼ ஸ்பூன் ஜாதிக்காய்
  • பச்சை கற்பூரம் கொஞ்சம்
  • ½ கப் நெய்
  • 10 முந்திரி
  • 2 ஸ்பூன் தேங்காய்
  • ஸ்பூன் உளர் திராச்சை

Instructions

செய்முறை:

  • முதலில் அரிசியையும், பாசிப்பருப்பையும் ஒரு முறை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். பிறகு அதனை இரண்டாவது தண்ணீரில் ஊறவைக்கவும்.
  • அடுத்து பொங்கல் பானை அடுப்பில் வைத்து அதில் காய்ச்சாத பால் சேர்த்து அரிசி, பருப்பு ஊறவைத்த தண்ணீர் 1 காப், மற்றும் 5 கப் தண்ணீர் சேர்த்து பொங்கி வரும் வரை விடவும்.
  • பொங்கி வந்த பிறகு அரிசியையும், பருப்பையும் சேர்த்து அத்துடன் கடலை பருப்பு சேர்த்து நன்கு வேக விடவும். நன்கு கொழைய வேகவேண்டும்.
  • கொழைய வெந்ததும் தீயை குறைத்து அதில் வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறவும். அத்துடன் ஏலக்காய் பொடி, ஜாதிக்காய் பொடி, பச்சை கற்பூரம், சேர்த்து கிளறிவிட்டுட்டே இருக்கவேண்டும்.
  • கிளற கிளற இடையில் நெய் ஊற்றி கிளறிவிடவேண்டும்
  • அரிசி நன்கு வெந்ததும் பொங்கல் பதத்திற்கு வந்ததும். இறக்கிவைக்கவும்.
  • பிறகு ஒரு கடாயில் மீதி நெய் சேர்த்து அதில் முந்திரி பருப்பு, துண்டு துண்டாக நறுக்கிய தேங்காய் சேர்த்து லைட்டாக வறுக்கவும். முந்திரி பருப்பு நிறம் மாறியதும் திராச்சை சேர்த்து வறுத்து பொங்கலில் ஊற்றி கிளறவும்.
  • இப்பொழுது சுவையான சர்க்கரை பொங்கல் தயார்.
Advertisement
swetha

Recent Posts

வளர்பிறை சதுர்த்தி வழிபாடு செய்து விநாயகர் பெருமான் அருளை முழுமையாக பெறுங்கள்!

பொதுவாக இருக்கின்ற 16 விதிகளில் நான்காவது ரீதியாக வரக்கூடியது சதுர்த்தி திதி. பொதுவாக ஒவ்வொரு தெய்வத்திற்கும் நட்சத்திரம் திதி கிழமை…

35 நிமிடங்கள் ago

இந்த வெயிலுக்கு இளநீர் சர்பத் செஞ்சு குடித்து பாருங்க!!!

அடிக்கிற வெயிலுக்கு நமக்கு சோறு கூட தேவையில்லை ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தான் தோணும் அந்த வகையில இயற்கையாகவே…

2 மணி நேரங்கள் ago

ருசியான சிறு தானிய சப்பாத்தி இப்படி ட்ரை பண்ணி பாருங்க எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க!

சிறு தானிய வகைகளில் ஒன்றாக இருக்கும் இந்த கம்பு நிறையவே சத்துக்களை கொண்டுள்ளது. குறிப்பாக நார்ச்சத்து நிறைந்துள்ள இந்த கம்பு…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 14 மே 2024!

மேஷம் நீங்கள் முன்னெடுக்கும் பணிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். வருமானமும் அதிகரிக்கும். யாருடனும் வாக்குவாதம்…

5 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு, பூரிக்கு இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா செஞ்சு கொடுங்க நாலஞ்சு அதிகமாக சாப்பிடு வாங்க!

ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும்,…

14 மணி நேரங்கள் ago

டிபனுக்கு வழக்கம் போல் இல்லாமல் தக்காளி மசாலா பூரி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பூரி இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும்…

15 மணி நேரங்கள் ago