- Advertisement -
Home சைவம் சர்க்கரைவள்ளி கிழங்கு பட்டாணி மசாலா வித்தியாசமா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

சர்க்கரைவள்ளி கிழங்கு பட்டாணி மசாலா வித்தியாசமா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

- Advertisement -

உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா நிறைய பேருக்கு ரொம்ப ரொம்ப ஃபேவரட்டா இருக்கும் விசேஷ வீடுகளில் சைவ உணவு போட்டாங்கன்னா கண்டிப்பா இந்த உருளைக்கிழங்க பட்டாணி மசாலா இருக்கும். அது அவ்ளோ ருசியா இருக்கும். ஆனா இன்னைக்கு நம்ம உருளைக்கிழங்குக்கு பதிலா சர்க்கரைவள்ளி கிழங்கு வச்சு ஒரு சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு பட்டாணி மசாலா செய்யப்போகிறோம். இந்த சர்க்கரைவள்ளி கிழங்குல நிறைய நார்ச்சத்துக்கள் வைட்டமின் ஏ ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்து இருக்கிறதால எல்லாருமே இதை கண்டிப்பா சாப்பிடணும்.

இதை சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம், புளி சாதம், லெமன் சாதம், தக்காளி சாதம், தேங்காய் சாதம், மாங்காய் சாதம்ன்னு எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இதுக்கு முதல்ல நம்ம பச்சை பட்டாணியையும் சர்க்கரைவள்ளி கிழங்கையும் ஒரு ரெண்டு நிமிஷம் வேக வச்சு எடுத்துக்கணும். ரொம்பவும் குழைய வேக வைக்க கூடாது. அந்த மாதிரி செஞ்சோம் அப்படின்னா கண்டிப்பா ஒரு சூப்பரான சர்க்கரைவள்ளி கிழங்கு பட்டாணி மசாலா நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

மசாலாக்கு மிளகாய் தூள் மல்லி தூள் மஞ்சள் தூள் வெங்காயம் தக்காளி எல்லாம் சேர்த்து நல்லா வதக்கி பச்சை வாசனை போக செஞ்சோம் அப்படின்னா அவ்வளவு ருசியா இருக்கும். ருசியான இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு பட்டாணி மசாலாவுக்கு நிறைய பேரு அடிமையாகிடுவாங்க. எப்பவும் ஒரே மாதிரியா உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமா இந்த மாதிரியும் செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான சர்க்கரைவள்ளி கிழங்கு பட்டாணி மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

சர்க்கரைவள்ளி கிழங்கு பட்டாணி மசாலா | Sweet Potato Peas Masala Recipe In Tamil

உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா நிறைய பேருக்கு ரொம்ப ரொம்ப ஃபேவரட்டா இருக்கும் விசேஷ வீடுகளில் சைவ உணவு போட்டாங்கன்னா கண்டிப்பா இந்த உருளைக்கிழங்க பட்டாணி மசாலா இருக்கும். அது அவ்ளோ ருசியா இருக்கும். ஆனா இன்னைக்கு நம்ம உருளைக்கிழங்குக்கு பதிலா சர்க்கரைவள்ளி கிழங்கு வச்சு ஒரு சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு பட்டாணி மசாலா செய்யப்போகிறோம். இந்த சர்க்கரைவள்ளி கிழங்குல நிறைய நார்ச்சத்துக்கள் வைட்டமின் ஏ ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்து இருக்கிறதால எல்லாருமே இதை கண்டிப்பா சாப்பிடணும். இதை சாம்பார் சாதம் ரசம் சாதம் தயிர் சாதம் புளி சாதம் லெமன் சாதம் தக்காளி சாதம் தேங்காய் சாதம் மாங்காய் சாதம்ன்னு எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். எப்பவும் ஒரே மாதிரியா உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமா இந்த மாதிரியும் செஞ்சு பாருங்க.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: Sweet Potato Peas Masala
Yield: 4 People
Calories: 162kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 3 சர்க்கரைவள்ளி கிழங்கு
  • 1/4 கப் பச்சை பட்டாணி
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 2 பச்சை மிளகாய்
  • கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

  • சர்க்கரைவள்ளி கிழங்கை சதுர வடிவில் நறுக்கி தண்ணீரில் சேர்த்து அதனுடன் பச்சை பட்டாணியையும் சேர்த்து இரண்டு நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு சீரகம், கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
  • பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது தக்காளி சேர்த்து நன்றாக மசிய வதக்கவும்.
  • மிளகாய் தூள் மல்லி தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கி பச்சை வாசனை போகும் வேக வைத்துள்ள பட்டாணி மற்றும் சர்க்கரைவள்ளி கிழங்கு சேர்த்து பிரட்டி இரண்டு நிமிடம் கழித்து கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான சர்க்கரைவள்ளி கிழங்கு பட்டாணி மசாலா தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 162kcal | Carbohydrates: 3.6g | Protein: 19g | Fat: 4.1g | Sodium: 114mg | Potassium: 275mg | Fiber: 11g | Vitamin C: 149mg | Calcium: 27mg | Iron: 19mg

இதனையும் படியுங்கள் : வட இந்திய ஸ்டைல் ரோட்டு கடை பட்டாணி மசாலா இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க