- Advertisement -
Home சைவம் சர்க்கரைவள்ளிக்கிழங்கு ராகி ரொட்டி ஆரோக்கியமா இந்த மாதிரி பிரேக் பாஸ்ட்க்கு செஞ்சு பாருங்க!!

சர்க்கரைவள்ளிக்கிழங்கு ராகி ரொட்டி ஆரோக்கியமா இந்த மாதிரி பிரேக் பாஸ்ட்க்கு செஞ்சு பாருங்க!!

- Advertisement -

எப்பவுமே காலைல டிபனுக்கு இட்லி தோசை பொங்கல் பூரி சப்பாத்தி அப்படின்னு ஒரே மாதிரியா செய்யாம கலி,கூழ், சத்தான ரொட்டி வகைகள் செஞ்சு சாப்பிட்டால் ரொம்பவே ஆரோக்கியமா இருக்கும். அந்த வகையில ராகி மாவு வச்சு அது கூட சர்க்கரைவள்ளிக்கிழங்கு சேர்த்து ஒரு சூப்பரான ரொட்டி செஞ்சு சாப்பிட்டு பாருங்க ரொம்பவே ஆரோக்கியமானதாக இருக்கும். சர்க்கரைவள்ளிக்கிழங்கு நிறைய நார் சத்துக்கள் நிறைந்திருக்கிறதால உடம்புக்கு ஆரோக்கியமானது. சர்க்கரைவள்ளி கிழங்கு வச்சு பெரும்பாலும் எந்த ரெசிபியும் செஞ்சிருக்க மாட்டீங்க ஆனா அதை அப்படியே சாப்பிட போரடித்ததுன்னா இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபி செஞ்சு சாப்பிட்டு பாருங்க இதுக்கு சைடிஷ் கூட தேவைப்படாது அப்படியே சாப்பிடலாம்.

ராகி மாவை நல்லா வேக வச்சு சப்பாத்தி மாவு மாதிரி பிசைந்து சர்க்கரைவள்ளி கிழங்கையும் வேக வைத்து ஸ்டஃபிங் செஞ்சு இந்த ரொட்டி செஞ்சு சாப்பிடும் போது அவ்வளவு ருசியா இருக்கும். இந்த ருசியான ரொட்டியை ஒரு தடவை மட்டும் செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இதை காலையில டிபனுக்கும் செய்யலாம் இரவு டிபனுக்கும் செய்யலாம் அதுமட்டுமில்லாம ஈவினிங் டைம்ல ஸ்நாக்ஸ் மாதிரியும் செஞ்சு சாப்பிடலாம்.

- Advertisement -

பொதுவாக குழந்தைகள் ஈவினிங்ல வரும்போது பசிக்குதுன்னு சொல்லுவாங்க அந்த மாதிரி அவங்க கேட்கும் போது சாதம் கொடுக்காமல் இந்த மாதிரி ஒரு ஹெல்தியான ரொட்டி சுட்டுக் கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவாங்க. ராகி மாவு வச்சு இனிப்பான ராகி ரொட்டி, கார ராகி ரொட்டி இதெல்லாம் ஒரு சிலர் செய்வாங்க. இன்னைக்கு நம்ம ரொம்பவே வித்தியாசமான சர்க்கரைவள்ளி கிழங்கு வச்சு செய்யக்கூடிய இந்த ராகி ரொட்டி தான் பார்க்க போறோம் இது செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி. இதுல வெங்காயம் பச்சை மிளகாய் எல்லாமே சேர்த்து இனிப்பான சர்க்கரைவள்ளிக்கிழங்கோடு கொஞ்சம் காரமும் சேர்த்து செய்ய போறோம். இப்ப வாங்க இந்த சுவையான சர்க்கரைவள்ளி கிழங்கு ராகி ரொட்டி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

சர்க்கரைவள்ளி கிழங்கு ராகி ரொட்டி | Sweet Potato Ragi Roti Recipe In Tamil

எப்பவுமே காலைல டிபனுக்கு இட்லி தோசை பொங்கல் பூரி சப்பாத்தி அப்படின்னு ஒரே மாதிரியா செய்யாம கலி,கூழ், சத்தான ரொட்டி வகைகள் செஞ்சு சாப்பிட்டால் ரொம்பவே ஆரோக்கியமா இருக்கும். அந்த வகையில ராகி மாவு வச்சு அது கூட சர்க்கரைவள்ளிக்கிழங்கு சேர்த்து ஒரு சூப்பரான ரொட்டி செஞ்சு சாப்பிட்டு பாருங்க ரொம்பவே ஆரோக்கியமானதாக இருக்கும். சர்க்கரைவள்ளிக்கிழங்கு நிறைய நார் சத்துக்கள் நிறைந்திருக்கிறதால உடம்புக்கு ஆரோக்கியமானது. சர்க்கரைவள்ளி கிழங்கு வச்சு பெரும்பாலும் எந்த ரெசிபியும் செஞ்சிருக்க மாட்டீங்க ஆனா அதை அப்படியே சாப்பிட போரடித்ததுன்னா இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபி செஞ்சு சாப்பிட்டு பாருங்க இதுக்கு சைடிஷ் கூட தேவைப்படாது அப்படியே சாப்பிடலாம். ராகி மாவை நல்லா வேக வச்சு சப்பாத்தி மாவு மாதிரி பிசைந்து சர்க்கரைவள்ளி கிழங்கையும் வேக வைத்து ஸ்டஃபிங் செஞ்சு இந்த ரொட்டி செஞ்சு சாப்பிடும் போது அவ்வளவு ருசியா இருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Total Time15 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian, TAMIL
Keyword: Sweet Potato Ragi Roti
Yield: 4 People
Calories: 162kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 1 கப் ராகி மாவு
  • 1 டீஸ்பூன் நெய்
  • 1/4 கி சர்க்கரை வள்ளிக்கிழங்கு
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • சர்க்கரைவள்ளி கிழங்கை ஆவியில் வேகவைத்து எடுத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். அதனை நன்றாக மசித்து கொள்ளவும்.
  • மிக்ஸி ஜாரில் பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து சக்கரை வள்ளிக்கிழங்குடன் சேர்த்துக் கொள்ளவும்.
  • மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து நெய் உப்பு சேர்த்து ராகி மாவு சேர்த்து நன்றாக வெந்ததும் சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்ததும் நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  • அதனை தேய்த்து அதற்குள் சர்க்கரைவள்ளி கிழங்கு உருண்டையை வைத்து சப்பாத்திக்கு தேய்ப்பது போல் தேய்த்து தோசை சட்டியில் சேர்த்து எண்ணை ஊற்றி சுட்டு எடுத்தால் சுவையான சர்க்கரை வள்ளி கிழங்கு ராகி ரொட்டி தயார்.

Nutrition

Serving: 450g | Calories: 162kcal | Carbohydrates: 3.7g | Protein: 36g | Fat: 5.1g | Sodium: 118mg | Potassium: 216mg | Fiber: 15g | Vitamin A: 68IU | Vitamin C: 127mg | Calcium: 26mg | Iron: 29mg

இதனையும் படியுங்கள் : காலை உணவிற்கு உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு பிரெட் டோஸ்ட் செய்து கொடுங்கள்!!