- Advertisement -
டாங்கி மேக்ரோனி ,அதன் பெயரைக் கேட்டாலே உங்கள் வாயில் தண்ணீர் வரத்தான் செய்யும். இது நொடியில் தயாரிக்கலாம், மேலும் உங்கள் வீட்டிற்கு விருந்தினர் திடீரென்று வந்தால் , இதை உடனடியாக சுலபமாக செய்து பரிமாறலாம் . விருந்தினரும் ருசித்து டாங்கி மேக்ரோனியை உண்டு பாராட்டுவார்கள்.. நீங்கள் அதில் நிறைய காய்கறிகளையும் சேர்த்து செய்யலாம் ,, டாங்கி மேக்ரோனி யை சுவையாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றும். இந்த இட்டாலியன் மேக்ரோனியை இண்டியன் டிஷ்ஷா மாத்துற பக்குவமே நம்ம கையிலதான் இருக்கு. ஒங்க தேவைக்கேற்ப ஸ்பைஸியாக்கி ஒரு பிடி பிடிங்க . வாங்க இதை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
-விளம்பரம்-
டாங்கி மேக்ரோனி | Tangy Macaroni Recipe In Tamil
டாங்கி மேக்ரோனி ,அதன் பெயரைக் கேட்டாலே உங்கள் வாயில்தண்ணீர் வரத்தான் செய்யும். இது நொடியில் தயாரிக்கலாம், மேலும் உங்கள் வீட்டிற்கு விருந்தினர்திடீரென்று வந்தால் , இதைஉடனடியாக சுலபமாக செய்து பரிமாறலாம் . விருந்தினரும் ருசித்து டாங்கி மேக்ரோனியை உண்டு பாராட்டுவார்கள்.. நீங்கள் அதில்நிறைய காய்கறிகளையும் சேர்த்து செய்யலாம் ,, டாங்கி மேக்ரோனி யை சுவையாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றும்.இந்த இட்டாலியன்மேக்ரோனியை இண்டியன் டிஷ்ஷா மாத்துற பக்குவமே நம்ம கையிலதான் இருக்கு. ஒங்க தேவைக்கேற்ப ஸ்பைஸியாக்கி ஒரு பிடி பிடிங்க . வாங்க இதை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
Yield: 4
Calories: 206kcal
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் மேக்ரோனி
- 2 கப் தக்காளி விழுது
- 3 டீ ஸ்பூன் எண்ணெய்
- 3 டீ ஸ்பூன் ஃபிரஷ் க்ரீம்
- 1/2 டீ ஸ்பூன் மிளகாய்த்தூள்
- உப்பு தேவையானஅளவு
செய்முறை
- மேக்ரோனியை மூன்று கப் தண்ணீரில் 1/2 டீஸ்பூன் எண்ணெய், உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
- மேக்ரோனி முக்கால் பகுதி வெந்தவுடன் நீரை வடிகட்டவும். (மேக்ரோனி வேக வைக்கும் முறை: வெந்த ஒரு மேக்ரோனியை எடுத்துப் பாதியாக வெட்டினால் அதன் உள்ளே ஒரு சிறிய வெள்ளைக்கோடு தெரியும். அதுதான் பதம்.)
- மீதமுள்ள எண்ணெயைச் சூடாக்கி அதில் தக்காளி விழுது, வெந்த மேக்ரோனி, மிளகாய்த்தூள், பிரஷ் க்ரீம் எல்லாவற்றையும் சேர்த்து முள் கரண்டியால் நன்கு பிரட்டி மிளகாய்த்தூள் வாசனை போனவுடன் கீழே இறக்கி பரிமாறவும்.
Nutrition
Serving: 100g | Calories: 206kcal | Carbohydrates: 88g | Protein: 15g | Fat: 3g
- Advertisement -