- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
தக்காளி ரசம், மிளகு ரசம், புளி ரசம், மாங்காய் ரசம், தேங்காய் பால் ரசம் அப்படின்னு ரசத்துலையே நிறைய வெரைட்டீஸ் செஞ்சிருப்பீங்க. ரசம் அப்படின்னாலே பொதுவா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். ரசம் சாதத்துக்கு உருளைக்கிழங்கு ஃப்ரை நிறைய பேருக்கு ஃபேவரட் ஆக இருக்கும் ஒரு சிலருக்கு பிரியாணி கூட பிடிக்காது ஆனா ரசம் சாதம் தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த வகையில இன்னைக்கு நம்ம பீட்ரூட் செய்வது ஒரு சூப்பரான பீட்ரூட் ரசம் செய்ய போறோம். பொதுவாக பீட்ரூட் வைத்து அல்வா செஞ்சிருப்பீங்க. பீட்ரூட் பொரியல் செஞ்சு இருப்பீங்க.
பீட்ரூட் ஜூஸ் கூட செஞ்சுருப்பீங்க ஆனா பீட்ரூட் வச்சு இந்த மாதிரி ஒரு ரசம் கண்டிப்பா செஞ்சிருக்க மாட்டீங்க. இனிப்பா புளிப்பா காரமா சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும். இது கூட உருளைக்கிழங்கு பொரியல் இல்லனா முட்டை வறுவல் வச்சிக்கிட்டீங்கன்னா கண்டிப்பா ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். இந்த சுவையான ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம ஒரு தடவை செஞ்சு பாருங்க குழந்தைகளுக்கு பீட்ரூட் கண்டிப்பா வாரத்துக்கு ஒரு தடவையாவது கொடுக்கணும். பீட்ரூட் பொரியல் சாப்பிட மாட்டேன் அவங்களுக்கு இந்த மாதிரி ஒரு தடவை பீட்ரூட் வச்சு ரசம் செஞ்சு கொடுங்க பீட்ரூட் சாறு இறங்கி ரசம் ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான பீட்ரூட் ரசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பீட்ரூட் கோலா உருண்டை குழம்பு
Ingredients
Method
பீட்ரூட்டை கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி குக்கரில் சேர்த்து உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், மிளகு, பச்சை மிளகாய் தக்காளி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசல் பீட்ரூட் அரைத்த விழுது அரைத்து வைத்த சீரக விழுது அனைத்தையும் சேர்த்து உப்பு போட்டு பெருங்காயத்தூள் போட்டு அடுப்பில் வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்து ரசத்தில் சேர்த்து விடவும்.
ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான பீட்ரூட் ரசம் தயார்.






