Advertisement
சைவம்

புராட்டாசி மாத ஸ்பெஷல் ருசியான ப்ரோக்கோலி சாம்பார் ஒருமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement

ப்ரோக்கோலி உடம்புக்கு ரொம்ப ரொம்ப ஆரோக்கியம் நிறைந்தது. கண் பார்வை நன்றாக தெரிய, எலும்புகள் வலுப்பெற, இதய நோய் பாதிப்புகள் வராமல் தடுக்க, செரிமான கோளாறுகளை சீர் செய்ய, கொலஸ்ட்ராலை குறைக்க, கேன்சரை அழிக்க, இளமையை தக்க வைக்க, இப்படி நன்மைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இதோடு மட்டுமல்லாமல் விட்டமின் ஏ, சி சத்துக்களும் இதில் அதிகமாக நிறைந்துள்ளது. காலிஃப்ளவர் போலவே பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய இந்த ப்ரோக்கோலியை பார்த்தால் யாரும் வாங்க மாட்டாங்க. இதை எப்படி சமைப்பது என்று தெரியாமலே இதை நிறைய பேர் வாங்கவே மாட்டாங்க.இனி கடையில் இந்த ப்ரோக்கோலியை பார்த்தால் விடாதீங்க. உடனே வாங்கிட்டு வந்துடுங்க.

ரொம்ப ரொம்ப சுலபமான ப்ரோக்கோலி தண்டு சாம்பார் இதோ உங்களுக்காக. இந்த பிரக்கோலியை எப்படி சமைப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு சில விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பிரக்கோலியை வாங்கி வீட்டில் வைத்து சமைக்காமல் விட்டு விட்டால் அது மஞ்சள் நிறத்தில் மாறிவிடும். அப்படி நிறம் மாறிவிட்டால் அதை சமைத்து சாப்பிட வேண்டாம். வாங்கியவுடன் கூடுமானவரை ஃப்ரிட்ஜில் கூட வைக்காமல் அப்போதே சமைப்பது நல்லது.

Advertisement

ஒவ்வொரு வீட்டிலும் சாம்பார், கூட்டு ஒவ்வொரு விதமாக செய்வார்கள். இன்று நாம் செய்யப்போகும் இந்த ப்ரோக்கோலி சாம்பார் ரொம்ப ரொம்ப ருசியாகவும் இருக்கும். அதே சமயம் செய்வதற்கு எந்த கஷ்டமும் இருக்காது. பத்தே நிமிடம்  போதும் ப்ரோக்கோலி சாம்பார் தயாராகிவிடும். சரி வாங்க ஆரோக்கியமான அசத்தலான ப்ரோக்கோலி சாம்பார் செய்முறையை பார்த்துவிடலாம்.

ப்ரோக்கோலி சாம்பார் | Broccoli Sambar Recipe In Tamil

Print Recipe
ரொம்ப ரொம்ப சுலபமான ப்ரோக்கோலி தண்டு சாம்பார்
Advertisement
இதோ உங்களுக்காக. இந்த பிரக்கோலியை எப்படி சமைப்பதுஎன்பதை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு சில விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.பிரக்கோலியை வாங்கி வீட்டில் வைத்து சமைக்காமல் விட்டு விட்டால் அது மஞ்சள் நிறத்தில்மாறிவிடும். அப்படி நிறம் மாறிவிட்டால் அதை சமைத்து சாப்பிட வேண்டாம். வாங்கியவுடன்கூடுமானவரை ஃப்ரிட்ஜில் கூட வைக்காமல் அப்போதே சமைப்பது நல்லது.
Course Kulambu
Cuisine tamil nadu
Keyword Broccoli Sambar
Prep Time
Advertisement
5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 123

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 2 கப் துவரம் பருப்பு
  • 1 ப்ரோக்கோலி
  • 1 கப் சின்ன வெங்காயம்
  • 1 பல் பூண்டு
  • 2 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 2 தேக்கரண்டி சாம்பார் தூள்
  • 1/2 தேக்கரண்டி புளி பேஸ்ட்
  • வெல்லம் சிறிதளவு
  • கொத்தமல்லி இலை சிறிதளவு
  • உப்பு தேவைக்கேற்ப

தாளிக்க

  • எண்ணெய் சிறிதளவு
  • கடுகு சிறிதளவு
  • உளுத்தம் பருப்பு சிறிதளவு
  • சீரகம் சிறிதளவு
  • வெந்தயம் சிறிதளவு
  • காய்ந்த மிளகாய் சிறிதளவு
  • கறிவேப்பிலை சிறிதளவு

Instructions

  • பாத்திரத்தில் துவரம் பருப்புடன் பூண்டு. மஞ்சள் தூள், பச்சை மிளகாய், பாதி தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  • மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
     
  • வெங்காயம்அரை பதம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். வதங்கியதும் நறுக்கிய ப்ரோக்கோலித் தண்டுகளைச் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
  • பிறகு சாம்பார் தூள், உப்பு மற்றும் புளிக் கரைசல் சேர்த்து, தேவையெனில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும் அத்துடன் வேக வைத்த துவரம் பருப்பைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • நன்கு கொதி வந்ததும் ப்ரோக்கோலித் தண்டு வெந்ததைச் சரி பார்த்து, வெல்லம் சேர்த்து, மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.

Nutrition

Serving: 100g | Calories: 123kcal | Carbohydrates: 49g | Protein: 8g | Cholesterol: 2.3mg | Sodium: 6.9mg | Potassium: 1.7mg | Fiber: 1.7g | Vitamin A: 3IU | Vitamin C: 7.9mg | Calcium: 7mg
Advertisement
Prem Kumar

Share
Published by
Prem Kumar

Recent Posts

எளிமையான மற்றும் சுவையான தக்காளி சிக்கன் கறி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள் அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

13 நிமிடங்கள் ago

அருமையான வாழைக்காய் பருப்பு கடையல் இப்படி செய்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

மதிய நேரத்தில் என்ன சமைக்கலாம் என்று யோசித்தே சலித்து போய்விட்டதா. சாம்பார் செய்வதை விட சுலமான முறையில் அதுவும் சுவையான…

27 நிமிடங்கள் ago

சகல ஐஸ்வர்யத்தையும் கொடுக்கும் சாம்பிராணி தூபம்

பொதுவாக நம் வீட்டில் எப்பொழுது பூஜை செய்து விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபட்டாலும் சாம்பிராணி தூபம் போடுவது வழக்கம். அது…

2 மணி நேரங்கள் ago

ஆரோக்கியமான சுவை மிகுந்த ராகி வெஜ் நூடுல்ஸ்! இப்படி செஞ்சி பாருங்க!!!

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். நாகரிகம் என்ற பெயரில் தற்போது பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா உள்ளிட்ட உணவுகளை…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 15 மே 2024!

மேஷம் இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தாயிடம் இருந்து மகிழ்ச்சியை பெறுவீர்கள். இன்று உங்களின் தனிப்பட்ட…

6 மணி நேரங்கள் ago

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…

15 மணி நேரங்கள் ago