- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
இரவு சப்பாத்தி அல்லது பூரி செய்தால் அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிக வேலை செய்யாமல் சட்டென்று ஒரு சைடு டிஷ் செய்ய நினைகிறீர்களா? உங்கள் வீட்டில் முட்டைக்கோஸ் உள்ளதா? அப்படியானால் அந்த முட்டைக்கோஸ் கொண்டு முட்டைக்கோஸ் குருமா செய்யுங்கள். பொதுவாக சப்பாத்தி அல்லது பூரிக்கு சிக்கன் குருமா, மட்டன் குருமா, உருளைக்கிழங்கு குருமா, சோயா குருமா அப்படின்னு நிறைய குருமா ரெசிபி செய்திருப்பீர்கள். அந்த வகையில் வீட்டில் எந்த காய்கறியுமே இல்லை என்றால் இந்த ருசியான முட்டைக்கோஸ் குருமா செய்து பாருங்கள். இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி மட்டுமல்லாமல் சாதத்திற்கும் ஒரு பெர்ஃபெக்ட்டான காம்பினேஷன் ஆக இருக்கும். இந்த குருமாவை ஒரு முறை செய்து விட்டால் போதும் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் கணக்கில்லாமல் சாப்பிட்டுகிட்டே இருப்பார்கள் அந்த அளவுக்கு இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். இந்த ரெசிபிக்கு நாம் ஒரு மசாலா அரைத்து செய்யப்போறோம் அந்த மசாலா தான் இந்த ரெசிபிக்கு ரொம்ப ரொம்ப சூப்பரான வாசனையை கொடுக்கக் கூடியது. இதனை சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இந்த ரெசிபியை ஒரு தடவை செய்து பார்த்து விட்டால் போதும் அதுக்கப்புறம் அடிக்கடி இதை நீங்கள் செய்வீர்கள் அந்த அளவுக்கு ருசியா இருக்கும். அதனால் இந்த ருசியான வாசனையான முட்டைக்கோஸ் குருமா ரெசிபியை கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் ட்ரை பண்ணி பாருங்கள். இப்போது ருசியான இந்த முட்டைக்கோஸ் குருமா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மதிய உணவிற்கு முட்டைக்கோஸ் சாதம் இந்த மாதிரி சிம்பிளா ஒரு தடவ செஞ்சு பாருங்க!
Ingredients
Method
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின் முட்டைக்கோஸ், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும். அதன்பிறகு நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு இரண்டு விசில் விட்டு இறக்கவும்.
பின் குக்கரை திறந்து கொத்தமல்லி சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான முட்டைக்கோஸ் குருமா தயார்.






