- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதுவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். பொதுவாக வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம்.
ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது நம் பிள்ளைகளுக்கு வழக்கமாக நாம் செய்து கொடுக்கும் லஞ்ச் பாக்ஸ் ரெசிபிகளுக்கு மாற்று உணவுக்கான நமது தேடல் தீராதது. அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது மிகவும் சுவையான நெய் சாதம் ரெசிபி. பொதுவாக நெய் சாதம் என்றால், சாதத்தில் நெய்யை ஊற்றி கிளறி கொடுப்போம். ஆனால் இந்த நெய் சாதத்திலேயே சில வகைகள் உள்ளன.
அதில் நாம் இங்கு காண இருப்பது பிரியாணி ஸ்டைலில் செய்யும் நெய் சாதம். உங்கள் வீட்டில் உள்ள குழந்தை சாப்பிடுவதற்கு அடம் பிடித்தால் இந்த நெய் சாதத்தை செய்து கொடுத்தலே போதும், குழந்தைகள் அதிகமாவே விரும்பி சாப்பிடுவார்கள். இந்த நெய் சாதம் சாப்பிடுவதற்கு மட்டுமின்றி குழந்தைகளின் உடலுக்கு பல ஆரோக்கியங்களை தருவதற்கும் மிகவும் முக்கியமாக இருக்கிறது, எனவே நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு இந்த நெய் சாதத்தை செய்து கொடுங்கள்.
வளரும் குழந்தைகளுக்கு நெய் சேர்த்த உணவுகளை கொடுக்க வேண்டும் என்று உணவியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். நெய்யில் கலோரிகள் அதிகம் இருப்பதால் அளவாக சாப்பிட்டால், அனைத்துமே நல்லது தான். தினமும் சாம்பார், காரக்குழம்பு என்று சமைக்காமல் ஒரு நாள் மாறாக இந்த நெய் சாதம் செய்து பாருங்கள். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். இப்போது சுவையான நெய் சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : நெய் முட்டை மசாலா
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய வெங்காயம், முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, கல் பாசி, ஏலக்காய், மிளகு, ஜாதிபத்ரி, கருப்பு ஏலக்காய் சேர்த்து வதக்கவும்.
பின் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன்பிறகு ஊற வைத்த அரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
சாதம் பாதியளவு வெந்ததும் தக்காளி மற்றும் புதினா சேர்த்து கலந்து மூடி வைத்து வேக விடவும்.
பின் இவை நன்கு வெந்து வந்ததும் நெய், வறுத்த முந்திரி, திராட்சை, வெங்காயம் சேர்த்து கலந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான நெய் சாதம் தயார்.






