- Prep
- 5 min
- Cook
- 5 min
- Total
- 10 min
- Serves
- 2
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
உங்களுக்கு சிக்கன், மட்டன் செய்து அலுத்துவிட்டதா? சாதத்திற்கு ஏற்றவாறு முட்டையைக் கொண்டு சற்று வித்தியாசமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் கார முட்டை ஆம்லேட் செய்யுங்கள். இது சாதத்திற்கு அட்டகாசமாக இருப்பதோடு, செய்வதற்கும் மிகவும் எளிதாக இருக்கும். அதோடு இந்த ரெசிபியை நீங்கள் சப்பாத்தி, தோசையுடனும் சாப்பிடலாம். உங்களுக்கு கார முட்டை ஆம்லெடை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த முட்டை மிகவும் இன்றியமையானது. ஏனெனில் முட்டையில் அதிக அளவில் சத்துக்களானது நிறைந்துள்ளது.
முட்டையில் புரதம் ரிபோப்லாவின், போலேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம், மக்னீசியம், விட்டமின் A, E மற்றும் B6 அதிகமாக உள்ளதால், இவை தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டத்தை அளிக்கிறது. முட்டை சாப்பிட்டால் மூளையானது மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் அதன் ஆற்றலும் அதிகரிக்கும். முட்டையை தவறாமல் தினமும் சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் வரும் ஆபத்தானது குறையும். அந்த வகையில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்ட முட்டையை வைத்து இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்கள்.
வீட்ல எதுவுமே இல்லனா கூட ரசம் இல்லனா பருப்பு வச்சு அதுக்கு சைட் டிஷ்ஷா இந்த மாதிரி கார முட்டை ஆம்லெட் செஞ்சிங்கனா கண்டிப்பாக டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். குழந்தைகள் சாப்பிட ஏதாவது கேட்டு அடம் பிடிக்கும் போது வீட்டில் முட்டை இருந்தா போதும் இந்த மாதிரி சூப்பரா செஞ்சு கொடுத்திடுங்க. ஈவினிங் டைம்ல இதை குழந்தைகளுக்கு ஸ்கூல் விட்டு வரும்போது செஞ்சு கொடுக்கலாம். இப்ப வாங்க இந்த சிம்பிளான கார முட்டை ஆம்லெட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கருவேப்பிலை முட்டை பிரை
Ingredients
Method
ஒரு பவுளில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகு தூள், சிறிதளவு வெங்காயம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதன்பிறகு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா தூள், மல்லி தூள், சீரகத்தூள், கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
பின் நாம் கலந்த வைத்துள்ள முட்டையை சேர்த்து மூடி வைத்து வேக விட்டு திருப்பி போட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான கார முட்டை ஆம்லெட் தயார்.






