- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
சிக்கன் ப்ரை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியா செஞ்சிருப்பீங்க ஒவ்வொரு ஊர்லயும் சிக்கன் ஃப்ரை ஒவ்வொரு மாதிரி செய்வாங்க அப்படின்னு சொல்லலாம். ஆந்திரால ரொம்ப காரசாரமா செய்வாங்க அந்த மாதிரி ஒவ்வொரு இடத்திலும் அவங்க டேஸ்டுக்கு தகுந்த மாதிரி சில பொருட்கள் சேர்த்து சிக்கன் பிரை செய்வாங்க. அந்த வகையில கேரளா ஸ்பெஷல் சிக்கன் ப்ரை இந்த மாதிரி மசாலா எல்லாம் அரைச்சு செஞ்சு பாருங்க டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். ஒரு சிலர் சிக்கன் 65 மசாலா வாங்கி அதை போட்டு பிரட்டி எடுத்து சிக்கன் பிரை செஞ்சிடுவாங்க.
ஆனா ஒரு சிலர் அந்த மாதிரி செய்யாமல் நிறைய மசாலா அரைச்சு சேர்த்து செய்வாங்க அந்த வகையில கேரளா ஸ்பெஷல் சிக்கன் ப்ரை நல்லா காரசாரமா சாப்பிடவே ருசியா இருக்கும். மொறு மொறுப்புக்காக அரிசிமாவும் சோளமாவும் சேர்த்துக்கலாம் ஆனா அதுவும் நிறைய சேர்க்கக்கூடாது ரொம்ப குறைவாக சேர்க்க வேண்டும். அப்பதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும். அந்த வகையில இப்ப நம்ம ஒரு சூப்பரான டேஸ்டான கேரளா ஸ்பெஷல் சிக்கன் ப்ரை செய்ய போறோம். இதுக்கு நம்ம ஒரு மசாலா அரைக்க போறோம்.
அந்த மசாலாவில் கருவேப்பிலை கொத்தமல்லி இலைகள் சோம்பு எல்லாமே சேர்த்து அரைக்கிறதால வாசனை சூப்பரா இருக்கும். இத சிக்கன்ல போட்டு பிரட்டி நல்லா ஊற வச்சிட்டு அதுக்கப்புறம் பொரிச்சு எடுத்தா சூப்பரா இருக்கும். பிரியாணிக்கு இந்த கேரளா ஸ்பெஷல் சிக்கன் ப்ரை ஓட தயிர் பச்சடியும் வைத்து சாப்பிட்டால் அவ்வளவு சூப்பரா இருக்கும். டேஸ்ட்டான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே அடிமை ஆயிடுவாங்க அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான கேரளா ஸ்பெஷல் சிக்கன் ப்ரை மொறு மொறுன்னு காரசாரமா மசாலா அரைச்சு போட்டு எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : அடுத்த முறை சிக்கன் எடுத்தா ஒரு தடவை பாட்டி கோழிக்கறி செஞ்சு பாருங்க அட்டகாசமா இருக்கும்!!
Ingredients
Method
சிக்கனை கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜார் பெரிய வெங்காயம் இஞ்சி பூண்டு கருவேப்பிலை சோம்பு, காய்ந்த மிளகாய் கொத்தமல்லி இலைகள் எலுமிச்சைச்சாறு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
இதனை சிக்கன் சேர்த்து காஷ்மீரி மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து முட்டை அரிசி மாவு சோள மாவு சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கலந்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து பொரித்து எடுத்தால் சுவையான கேரளா ஸ்டைல் சிக்கன் ப்ரை தயார்.






