மாங்காய் சீசன் முடிவுற்றாலும் சரி, மாங்காய் மீது இருக்கும் கிரேஸூக்கு குறைச்சலே இல்லை. மாங்காயை எந்த வகையில் கொடுத்தாலும் ருசித்து சாப்பிடும் மக்களுக்கான சூப்பர் டிஷ் இது. மாங்காய் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். காரணம் அதிலிருக்கும் புளிப்பு சுவை தான். புளிப்பு, காரம் எல்லாம் சேர்த்து சமைத்தால் எப்படி இருக்கும். கண்டிப்பாக அன்றைக்கு உங்கள் நாவிற்கு விருந்து தான். மாங்காயில் அனைவரும் ஊறுகாய் செய்து தான் பார்த்திருப்போம்.
ஆனால் மாங்காயில் சுவையான மாங்காய் பச்சடி எப்படி செய்யலாம் என்று தெரிந்துக்கொள்ளுவோம். இந்த மாங்காய் பச்சடி உங்களுக்கு காலை உணவாகவும் நீங்கள் செய்து உண்ணலாம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவாகவும் கொடுத்து விடலாம். இந்த பச்சடி தமிழர்களின் அற்புதத்தயாரிப்பு என்றே சொல்லலாம். மாங்காய் மருத்துவ குணம் நிறைந்தது, பெரும்பாலானோர் வீட்டில் அடிக்கடி மாங்காய் பயன்படுத்தப்படுகிறது. தினமும் சாம்பார், ரசம், புளிக்குழம்பு, சாப்பிட்டு அலுத்துப் போய்விட்டதா.
இனி மாங்காய் வைத்து ஒரு பச்சடி சுலபமாக எப்படி செய்வது, என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டு உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இது போன்று ஒரு முறை செய்து கொடுத்து பாருங்கள்!! மாங்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள், குறிப்பாக குழந்தைகள். இதனை சூடான சாதம், சப்பாத்தி, புல்கா போன்றவற்றிற்கு வைத்து சாப்பிடலாம். இதனை வளரும் குழந்தைகளுக்கு சிறிது நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது சுவையான மாங்காய் பச்சடி எப்படி செய்வதென்று பார்ப்போம்.
மாங்காய் பச்சடி | Mangai Pachadi Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 2 மாங்காய்
- 10 பல் பூண்டு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 2 காய்ந்த மிளகாய்
- 1/4 டீஸ்பூன் வெந்தயம்
- நல்லெண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு, சீரகம், மாங்காய், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து அதனுடன் நாம் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும்.
- பின் உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான மாங்காய் பச்சடி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : இந்த மாங்காய் சீசன்லயே ஒரு தடவை மாங்காய் ரசம் இந்த மாதிரி வச்சு பாருங்க!!





