- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதுவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் தேங்காய் இருந்தால் அதை வைத்து ஒரு ரெசிபி செய்யுங்கள். அதுவும் வழக்கமாக செய்வது போன்று தேங்காய் சாதம் சாதம் செய்யாமல் காரசாரமாக மசாலா தேங்காய் சாதம் செய்யுங்கள். இதுவரை தேங்காய் சாதம், தேங்காய் பால் சாதம் இதெல்லாம் செய்து சாப்பிட்டிருப்பீர்கள் ஆனால் மசாலா தேங்காய் சாதம் ஒரு தடவை செய்து பாருங்கள் கண்டிப்பா அவ்வளோ டேஸ்டாக இருக்கும்.
குழந்தைகளின் மதிய உணவிற்கு இதனை செய்து கொடுத்து விடுங்கள் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு வருவார்கள் அந்த அளவுக்கு இந்த மசாலா தேங்காய் சாதம் செம டேஸ்டாக இருக்கும். இந்த மசாலா தேங்காய் சாதத்திற்கு சைடு டிஷ்ஷாக அப்பளம் மட்டும் பொரித்தால் போதும் வேற எதுவுமே பெருசா தேவைப்படாது. வீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லை என்றால் இந்த மசாலா தேங்காய் சாதத்தை செய்து கொடுங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது சுவையான மசாலா தேங்காய் சாதம் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : சிக்கன் தேங்காய் ரோஸ்ட்
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், சோம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் உப்பு, கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், தனியா தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் வடித்த சாதம் மற்றும் கொத்தமல்லி சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான மசாலா தேங்காய் சாதம் தயார்.






