- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? சப்பாத்திக்கு எப்போதும் சாம்பார், சட்னி என சாப்பிட்டு போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? ஆனால் புதினா உள்ளதா? அதை வைத்து சப்பாத்திக்கு அற்புதமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் சப்பாத்திக்கு சைடிஷ்ஷாக புதினா வைத்து ஒரு வித்தியாசமான தொக்கு செய்து பாருங்கள். தமிழகத்தில் சப்பாத்திக்கு சைடிஷ் என்று கேட்டால் பலரும் சிறிது நேரம் கூட தாமதிக்காமல் தக்காளி தொக்கு என்று தான் சொல்வார்கள்.
ஏனென்றால் சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கின் காம்பினேஷன் அவ்வாறு. எப்போதும் ஒரே மாதிரி தக்காளி தொக்கு செய்யாமல் சற்று வித்தியாசமாக புதினா அதிகமாகச் சேர்த்து அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து ஒரு சூப்பரான தொக்கு செய்யுங்கள். சப்பாத்திக்கு மட்டுமல்லாமல் இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் ஒரு அருமையான ரெசிபி தான் இந்த புதினா தொக்கு. முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
முக்கியமாக இந்த புதினா தொக்கு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதால், பேச்சுலர்களும் இதை ட்ரை செய்யலாம். இந்த தொக்கை பக்குவமாக செய்தால் மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம். வேலை விட்டு வந்து சமைக்க முடியாத நேரத்திலும் பொரியல் கூட்டு எதுவும் இல்லாத சமயத்திலும் இந்த தொக்கை வைத்து சாப்பிடலாம். வாருங்கள் இந்த பதிவில் சூப்பரான புதினா தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : புதினா கொத்தமல்லி துவையல் இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயம், கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, மல்லி, காய்ந்த மிளகாய் சேர்த்து தனித் தனியே வறுத்து எடுத்து கொள்ளவும்.
பின் புளி, பூண்டு, சின்ன வெங்காயம், புதினா ஆகியவற்றை வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் இவை அனைத்தும் சேர்ந்து அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம் சேர்த்து பொரிந்ததும் நாம் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான புதினா தொக்கு தயார்.






