- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- evening, snacks
மாலை நேரத்தில் டீ காபியோட ஸ்னாக்ஸ் சேர்த்து சாப்பிட எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதுலயும் வீட்ல செஞ்ச பஜ்ஜி, போண்டா, சிப்ஸ் இந்த மாதிரி ஐட்டங்கள் வைத்து சாப்பிடுவதற்கு யாருக்குத்தான் பிடிக்காது எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த வகையில் இன்னைக்கு நம்ம ஆனியன் ரிங்ஸ் எப்படி செய்வதென்று தான் பார்க்க போறோம். இந்த ஆனியன் ரிங்ஸை ஒரு தடவை மட்டும் சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் எப்போமே நீங்க இந்த ரெசிபியை தான் செஞ்சு சாப்பிடுவீங்க.
இந்த ஆனியன் ரிங்ஸை வட்டம் வட்டமாக நறுக்கி பொன்னிறமாக பொரித்து எடுத்து இதற்கு தொட்டுக்க ஏதாவது வைத்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு ருசியா இருக்கும் மாலை நேரமே சொர்க்கம் மாதிரி தெரியும். இந்த ஆனியன் ரிங்ஸை சாப்பிட்டு டீ குடித்தாலே போதும் வயிறுக்கு நிறைவாகவும் இருக்கும். இந்த ரெசிபியை குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரை எல்லாரும் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.
இந்த ஆனியன் ரிங்ஸை சாப்பாட்டுக்கு சைட் டிஷ்ஷாவும் வச்சு சாப்பிடலாம். ரொம்ப ரொம்ப டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா ஒரே ஒரு தடவை உங்களுடைய வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க. எப்பவுமே ஒரே மாதிரியா பஜ்ஜி வடை அப்படின்னு செய்யாம இந்த மாதிரி கொஞ்சம் டிஃபரண்டா செஞ்சு பாருங்க கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இப்போது சுவையான ஆனியன் ரிங்ஸ் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : மாலை வேளையில் டீ காபியுடன் சாப்பிட குக் வித் கோமாளியில் ஆண்டி செய்த மீன் போண்டா இப்படி செஞ்சு பாருங்க!!
Ingredients
Method
முதலில் வெங்காயத்தை சற்று பெரியதாக வட்ட வட்டமாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பவுளில் மைதா மாவு, சோள மாவு, மிளகு தூள், மிளகாய் தூள், பூண்டு பொடி, ஆனியன் பவுடர், உப்பு, பேக்கிங் பவுடர் மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
ஒரு பவுளில் பிரெட் தூள், உப்பு, நறுக்கிய கொத்தமல்லி, சில்லி பிளேக்ஸ், மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் வட்டமாக நறுக்கிய வெங்காயத்தை மைதா மாவு கலவையில் பிரட்டி பின் பிரெட் தூள் கலவையில் நன்கு பிரட்டி எடுத்து சிறிது நேரம் அப்படியே வைத்து விடவும்.
அதன்பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரட்டி வைத்துள்ள வெங்காயத்தை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான ஆனியன் ரிங்ஸ் தயார்.






