- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian
- Course
- evening, snacks
மீன் போண்டா நிறைய பேரு செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க. வெங்காய போண்டா முட்டை போண்டா இதெல்லாம் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா மீன் போண்டா ஒரு சில பேர் கேள்விப்பட்டிருக்கவே மாட்டீங்க ஆனா ஒரு சில பேர் விரும்பி சாப்பிட்டு இருப்பாங்க. இது பாண்டிச்சேரியில ரொம்ப ரொம்ப ஃபேமஸான ஒரு ரெசிபி அப்படின்னு சொல்லலாம். பாண்டிச்சேரியில் இருக்கக்கூடிய நிறைய கடைகளில் இந்த மீன் போண்டா கிடைக்கும். அவங்க தயாரிக்கிற ஒரு சீக்ரட்டான மசாலாவை வச்சு இந்த சூப்பரான மீன் போண்டா செய்வாங்க ஆனா மீன் போன்ற சாப்பிடுவதற்கு அவ்வளவு தூரம் போக தேவை இல்லை.
வீட்டிலேயே ஒரு சூப்பரான மீன் போண்டா செஞ்சு சுடச்சுட டீ காபி கூட சேர்த்து சாப்பிடலாம். ஒரு சிலருக்கு டீ காபி கூட வடை பஜ்ஜி சாப்பிடற பழக்கம் இருக்கும் அந்த மாதிரி பழக்கம் இருக்கிறவங்க எப்பவுமே ஒரே மாதிரியான வாழக்காய் பஜ்ஜி உளுந்த வடை பருப்பு வடை என்று சாப்பிடுவதற்கு பதிலா இந்த மாதிரி டிஃபரண்டான மீன் போண்டா செய்யலாம். நீங்க மீன் குழம்பு வைக்கிறதுக்கு மீன் வாங்கும்போது ஒரு ரெண்டு மூணு துண்டுகள் தனியா எடுத்து வச்சு கூட இந்த மீன் போண்டாவை செய்யலாம்.
இதுக்கு எந்த சைடு டிஷ்மே தேவைப்படாது அப்படியே சாப்பிடலாம். நல்ல மொறு மொறுன்னு சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். ருசியான சூப்பரான இந்த மீன் போண்டாவை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க. சுவையான சூப்பரான டேஸ்டான மீன் போண்டாவை ஒரு தடவ சாப்பிட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செஞ்சு சாப்பிட தோணும். குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.
வீட்டுக்கு வரக்கூடிய விருந்தாளிகளுக்கும் ஒரே மாதிரியா பஜ்ஜி கொடுக்காமல் இந்த சூப்பரான மீன் போண்டாவை செஞ்சு கொடுக்கலாம். இது செய்றதுக்கு ரொம்ப ரொம்ப குறைவான நேரம் மட்டுமே தேவைப்படும். உங்களுக்கு எந்த மீன் தேவைப்படுதோ எந்த மீன் பிடிக்குமோ அந்த மீன் வச்சு இந்த போண்டா செய்யலாம். ஆனால் பாறை மீன்ல செஞ்சா ரொம்பவே சூப்பரா இருக்கும்.இப்ப வாங்க இந்த சுவையான மீன் போண்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வித்தியாசமான இந்த மீன் பொடிமாஸ் ஒரு தடவை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க!
Ingredients
Method
பாறை மீனை கழுவி இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
வெந்ததும் உதிர்த்து ஒரு பாத்திரத்தில் போடவும் அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய கொத்தமல்லி, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, சீரகத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அதனை சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு அரிசி மாவு சிறிதளவு உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
உருண்டைகளை பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மீன் போண்டா தயார்.






