- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
எப்பவுமே இட்லி தோசைக்கு ஒரே மாதிரியா சட்னி, சாம்பார் அப்படின்னு செஞ்சு போர் அடிச்சு போச்சுன்னா ஒரு தடவை இந்த மாதிரி சூப்பரான பொட்டுக்கடலை குழம்பு செஞ்சு பாருங்க. கொஞ்சமா பொட்டுக்கடலை இருந்தாலே போதும் இந்த சுவையான குழம்பு செஞ்சுடலாம். இந்த டேஸ்டான ருசியான பொட்டுக்கடலை குழம்புக்கு இரண்டு இட்லி தோசை சேர்த்து சாப்பிடலாம் அந்த அளவுக்கு ருசியா இருக்கும். ரொம்ப ரொம்ப குறைவான பொருட்களை வைத்து குறைவான நேரத்திலேயே சட்டுனு இதை செஞ்சு முடிச்சிடலாம்.
வீட்டுக்கு யாராவது டக்குனு விருந்தளிகள் வந்துட்டா கூட இந்த சூப்பரான ரெசிபியை ஒரு தடவை உங்களுக்கும் செஞ்சு கொடுத்துடுங்க கண்டிப்பா அவங்க ரொம்ப விரும்பி சாப்பிட்டு போவாங்க. இந்த டேஸ்டான ரெசிபிக்கு எல்லாரும் அடிமை ஆகிடுவாங்க அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும். இந்த ருசியான ரெசிபிக்கு சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க.
குழந்தைகளுக்கு கொடுக்கும் போது கொஞ்சம் காரம் கம்மியா சேர்த்து கொடுங்க. இதுக்கு வெங்காயம் தக்காளி கொஞ்சம் அதிகமா சேர்த்து சாம்பார் தூள் சேர்த்து செஞ்சா கமகமன்னு சூப்பரா இந்த சூப்பரான ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணிடாம ஒரு தடவை செஞ்சு பாருங்க. இந்த ரெசிபிக்கு பொட்டுக்கடலையை வறுத்து அரைச்சு செஞ்சா ரொம்ப டேஸ்டா இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த டேஸ்டான ருசியான ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சோயா கோலா உருண்டை இந்த மாதிரி செஞ்சு பாருங்க சட்டுனு காலியாகிடும்!!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
பிறகு பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய் சேர்த்து மஞ்சள் தூள் கரம் மசாலா சாம்பார் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
ஒரு கடாயில் பொட்டுக்கடலையை சேர்த்து வறுத்து ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து அந்த பொடியை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
நன்றாக வெந்ததும் கொத்தமல்லி இலைகள் பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கினால் சுவையான பொட்டுக்கடலை குழம்பு தயார்.






