Advertisement
ஸ்நாக்ஸ்

சுவையான ராகி பால்ஸ் இப்படி செய்து கொடுங்கள். வீட்டில் இருப்பவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்!

Advertisement

டேஸ்டி ராகி பால்ஸ் எக்கச்சக்கமான சத்துக்களை உள்ளடக்கியது. எள்ளில் அபரிமிதமான சத்து உள்ளதோடு நன்கு சதை பிடிப்பாக உடம்பையும் வைத்திருக்கும். இரும்புச் சத்து நிறைய உள்ளது. நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வேலை செய்ய வைக்கும் அற்புத ரெசிபி இது. ஆரோக்கியமான உணவைப் பெற்றால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அத்தகைய ஆரோக்கியமான சிற்றுண்டி உணவுகளில் ஒன்று ராகி பால்ஸ். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மிகவும் சுவையாகவும் இருக்கும். மேலும் தயாரிக்க மிகக் குறைந்த நேரமே ஆகும். ஒரு முறை சாப்பிட்ட பிறகு, தினமும் சிற்றுண்டி உணவாக சாப்பிட விரும்புவீர்கள். சுத்தமான வீட்டில் தயாரிக்கும் நெய்யில் செய்தால் அதன் சுவை இரட்டிப்பாகும்.

ராகி பால்ஸ் | Ragi Balls Recipe In Tamil

Print Recipe
டேஸ்டி ராகி பால்ஸ் எக்கச்சக்கமான சத்துக்களை உள்ளடக்கியது. எள்ளில் அபரிமிதமான சத்து உள்ளதோடு நன்கு சதை பிடிப்பாக உடம்பையும் வைத்திருக்கும். இரும்புச் சத்து நிறைய உள்ளது. நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வேலை செய்ய வைக்கும் அற்புத ரெசிபி இது. ஆரோக்கியமான உணவைப் பெற்றால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அத்தகைய ஆரோக்கியமான சிற்றுண்டி உணவுகளில் ஒன்று ராகி பால்ஸ். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல,
Advertisement
மிகவும் சுவையாகவும் இருக்கும். மேலும் தயாரிக்க மிகக் குறைந்த நேரமே ஆகும். ஒரு முறை சாப்பிட்ட பிறகு, தினமும் சிற்றுண்டி உணவாக சாப்பிட விரும்புவீர்கள். சுத்தமான வீட்டில் தயாரிக்கும் நெய்யில் செய்தால் அதன் சுவை இரட்டிப்பாகும்.
Course Dessert, snacks
Cuisine tamilnadu
Keyword Ragi Balls
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 328

Equipment

  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1 கப் கேழ்வரகு மாவு
  • 1/2 கப் வெல்லப்பொடி
  • 1/2 கப் பொடித்த வேர்க்கடலை
  • 1 டேபிள்ஸ்பூன் வறுத்த எள்ளு
  • 1 சிட்டிகை உப்பு
  • 4 டீஸ்பூன் நெய்

Instructions

  • கேழ்வரகு மாவுடன் ஒரு சிட்டிகை உப்பை நன்கு கலந்து, திட்டமாக தண்ணீர் தெளித்து அடை மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.
  • பின்பு தோசைக் கல்லை சூடாக்கி அதில் மாவை மெல்லிய அடைகளாகத் தட்டி வெந்த பின் எடுத்து வைக்கவும். அடைகள் ஆறிய பிறகு சிறு துண்டங்களாக பிய்த்து மிக்ஸியில் இட்டு கரகரப்பாக அரைத்து வைக்கவும்.
  • வேர்க்கடலை மற்றும் வெல்லத்தை தனித்தனியே மிக்சியில் அரைத்து வைக்கவும். கடைசியாக கேழ்வரகு அடை, வெல்லம், வேர்க்கடலை மூன்றையும் சேர்த்து மிக்சியில் ஒரு சேர சுற்றவும்.
  • இந்தக் கலவையை உருண்டைகளாக உருட்டி, வறுத்த எள்ளின் மீது புரட்டி எடுக்கவும். டேஸ்டி ராகி பால்ஸ் தயார் .

Nutrition

Serving: 100g | Calories: 328kcal | Carbohydrates: 72g | Protein: 7.3g | Fat: 1.3g | Fiber: 11.5g | Iron: 6.3mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

காலை டிபனுக்கு பக்காவான முள்ளங்கி ஊத்தாப்பம் ஒரு தடவை இப்படி செய்து பாருங்கள்! 2 ஊத்தாப்பம் அதிகமாவே சாப்பிடுவாங்க!

தென்னிந்தியாவை பொறுத்தவரை, இட்லி மற்றும் தோசை என்பது தவிர்க்க முடியாத ஒரு உணவாகும். இதிலும் தோசை என்று எடுத்துக் கொண்டால்…

54 நிமிடங்கள் ago

சப்பாத்தி, புலவுடன் சாப்பிட ருசியான மஷ்ரூம் பட்டாணி கறி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

காளான் பிரியரா நீங்கள் அல்லது உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அதனை ஒரே மாதிரி சமைத்து போர்…

1 மணி நேரம் ago

அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தால் ஏற்படும் நன்மைகள்

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திருதியை திதியை அட்சய திருதியையாக கொண்டாடுகிறோம். அத்தகைய அட்சய திருதியை அன்று…

2 மணி நேரங்கள் ago

பிரெஞ்ச் ப்ரைஸ் மாதிரி கேரட் ப்ரைஸ் என்று ஒரு தடவை அசத்துங்க!

இப்பலாம் குழந்தைகளுக்கு கடைகளில் கிடைக்கிற பிரெஞ்சு ப்ரைஸ் kfc சிக்கன் ,சிக்கன் ரோல், அப்படின்னா இந்த மாதிரி ஐட்டங்கள் தான்…

4 மணி நேரங்கள் ago

மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான இந்த வாழைப்பழ குழி பணியாரம் செய்து கொடுங்கள் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும்!!

தோசை முதல் இட்லி மற்றும் சாம்பார் வரை தென்னிந்திய உணவு எல்லாமே ஆரோக்கியம் தான். தென்னிந்திய உணவு வகைகளில் பெரும்பாலான…

5 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2024 என்ன பொருள் வாங்கி வைத்து, எந்த முறையில் பூஜை செய்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் ?

இந்தியாவில் இந்துக்கள், ஜயினர்கள் ஆகிய மதத்தினரால் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது அட்சய திருதியை திருநாள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை…

8 மணி நேரங்கள் ago