- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast
தென்னிந்திய சமையலில் காலை உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இட்லி, தோசை, பூரி, கிச்சடி, பொங்கல், வடை, சாம்பார் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை காலை நேரத்தில் எடுத்து கொள்ளும் போது நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றல் சீராக கிடைக்கிறது. இந்த காலை உணவு பட்டியலில் பலருக்கும் மிகவும் பிடித்தமான மெனு வெண் பொங்கல். இதில் சமச்சீரான சத்துகள் நிறைந்துள்ளன.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலும் நமது வீடுகளில் காலை உணவாக வெண் பொங்கலை தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் எப்போதும் போல் இல்லாமல் ஒரு வித்தியாசமான, அதே சமயம் சத்தான ஒரு பொங்கல் ரெசிபியை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் அதைக் கொண்டு ஆரோக்கியமான தக்காளி பொங்கல் செய்து கொடுங்கள். உங்கள் காலை உணவை மிகவும் சுவையான உணவாக மாற்ற இந்த தக்காளி பொங்கலை ஒரு முறை செய்து பாருங்கள்.
இப்படி ஒரு தடவை நீங்கள் தக்காளி பொங்கல் செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிட கொடுத்தால் உங்களை அடிக்கடி இதுபோல் செய்து தர சொல்லி தொல்லை செய்வார்கள். அந்த அளவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு காலை உணவாக இந்த தக்காளி பொங்கல் மாறிவிடும் என்பதில் சந்தேகமே இல்லை. இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான தக்காளி பொங்கல் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : குடைமிளகாய் தக்காளி தொக்கு
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் பாசிப்பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் வறுத்து இந்த பாசிப்பருப்புடன் அரிசியை சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளி மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
பின் நாம் ஊற வைத்துள்ள அரிசி மற்றும் பருப்பை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் விட்டு குக்கரை மூடி ஐந்து விசில் விட்டு இறக்கவும்.
ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து காய்ந்ததும் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, முந்திரி பருப்பு, நறுக்கிய இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து பொங்கலில் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான தக்காளி பொங்கல் தயார்.






