உப்பு உருண்டை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

- Advertisement -

உப்பு உருண்டை ரொம்பவே பாரம்பரியமான ஒரு ரெசிபி அப்படின்னு சொல்லலாம். பெரும்பாலும் இந்த உப்பு உருண்டைய எல்லா ஊர்களிலும் செய்வாங்க. ஆனா மதுரை பக்கம் கொஞ்சம் ஃபேமஸ். இந்த உப்பு உருண்டை சாப்பிடுவதற்கு ரொம்ப வே சூப்பரா இருக்கும். இதை காலைல காலை உணவாகவும் சாப்பிடலாம் இல்லனா மாலை நேரத்துல ஸ்னாக்ஸ் ஆகவும் சாப்பிடலாம். ரெண்டு நேரத்திலேயே சாப்பிடுவதற்கு ஒரு சூப்பரான ரெசிபி. இந்த உப்பு உருண்டை சாப்பிடுறதுக்கு ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும். குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ஒரு பிடிச்ச ரெசிபி அப்படின்னே சொல்லலாம்.

-விளம்பரம்-

இந்த உப்பு உருண்டைக்கு தக்காளி சட்னி, காரச் சட்னி, மல்லி சட்னி இதெல்லாம் வைத்து சாப்பிட்டால் ஒரு அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும். குழந்தைகளோட டிபன் பாக்ஸில் வைத்து அனுப்புனீங்கன்னா கண்டிப்பா முழுவதுமா காலி பண்ணிட்டு தான் வருவாங்க. அந்த அளவுக்கு ஒரு சுவையான ரெசிபி இது. வீட்டுக்கு விருந்தாளிகள் வரும்போது அவங்களுக்கு ஸ்நாக்ஸா இந்த ரெசிபிய செஞ்சி கொடுங்க சாப்பிட்டுட்டு சுவையில் அசந்து போய் விடுவார்கள். இந்த சூப்பரான சுவையான ரெசிப்பி கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இதுல நம்ம தேங்காய் துருவல் சேர்த்து இருக்கிறதால சாப்பிடுறதுக்கே அவ்ளோ ருசியா இருக்கும்.

- Advertisement -

மேலும் இந்த ரெசிபிக்கு நம்ம ரெடிமேட் மாவை யூஸ் பண்ணாம அரிசி ஊற வைத்து அரைத்து அதுல உப்பு உருண்டை செய்றதால டேஸ்ட் இன்னுமே அட்டகாசமா இருக்கும். நீங்க உப்பு உருண்டை செய்றதா இருந்தா இதே மாதிரி செய்முறையில செஞ்சு பாருங்க ஒரு அட்டகாசமான பாரம்பரியமான உப்பு உருண்டை உங்களுக்கு கிடைக்கும். இத ஒரு சிலர் பெருசாகவும் செய்வாங்க ஒரு சிலர் சின்னதாவும் செய்வாங்க. அந்த வகையில நம்ம இன்னைக்கு கொஞ்சம் பெரிய உருண்டை தான் செய்யப் போறோம். உங்களுக்கு கொஞ்சம் சின்னதா தேவைப்பட்டால் கூட சின்னதா செஞ்சுக்கோங்க.

குழந்தைகளுக்கு சின்ன சின்னதா செஞ்சு கொடுத்தா ரொம்ப பிடிக்கும் அதனால கொஞ்சம் சின்னதாகவும் கொஞ்சம் பெருசாவும் செஞ்சு இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைங்க. எல்லாத்துக்கும் மேல இது நம்ம ஆவியில் வேகவைத்து எடுக்குறதால ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான ஒரு உணவு அப்படின்னே சொல்லலாம். ஆரோக்கியமான இந்த உணவை கண்டிப்பா அடிக்கடி காலை உணவாக செய்து சாப்பிடலாம். காலை உணவா பிரட் ஜாம், மேகி இதெல்லாம் சாப்பிடறதுக்கு பதிலா இந்த மாதிரி உப்பு உருண்டை செஞ்சு சாப்பிட்டீங்கன்னா உடம்புக்கு ஆரோக்கியமாக இருக்கும். இப்ப வாங்க இந்த பாரம்பரியமான உப்பு உருண்டைய எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

Print
5 from 1 vote

உப்பு உருண்டை | Uppu Urundai Recipe In Tamil

உப்பு உருண்டை ரொம்பவே பாரம்பரியமான ஒரு ரெசிபி அப்படின்னு சொல்லலாம். பெரும்பாலும் இந்த உப்பு உருண்டைய எல்லா ஊர்களிலும் செய்வாங்க. ஆனா மதுரை பக்கம் கொஞ்சம் ஃபேமஸ். இந்த உப்பு உருண்டை சாப்பிடுவதற்கு ரொம்ப வே சூப்பரா இருக்கும். இதை காலைல காலை உணவாகவும் சாப்பிடலாம் இல்லனா மாலை நேரத்துல ஸ்னாக்ஸ் ஆகவும் சாப்பிடலாம். ரெண்டு நேரத்திலேயே சாப்பிடுவதற்கு ஒரு சூப்பரான ரெசிபி. இந்த உப்பு உருண்டை சாப்பிடுறதுக்கு ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும். குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ஒரு பிடிச்ச ரெசிபி அப்படின்னே சொல்லலாம். இந்த உப்பு உருண்டைக்கு தக்காளி சட்னி, காரச் சட்னி, மல்லி சட்னி இதெல்லாம் வைத்து சாப்பிட்டால் ஒரு அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian
Keyword: Uppu Urundai
Yield: 4 People
Calories: 155kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் புழுங்கல் அரிசி
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 துண்டு இஞ்சி
  • 2 பச்சை மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 1 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • உப்பு                              தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • புழுங்கல் அரிசியை தண்ணீரில் சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைத்தப் பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு கறிவேப்பிலை கடலைப்பருப்பு போட்டு தாளித்துக் கொள்ளவும்.
  • பொடிப்பொடியாக நறுக்கிய இஞ்சி பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வதக்கியதும் அரைத்து வைத்துள்ள மாவை சேர்த்து கெட்டியாகும் வரை வதக்கவும்.
  • பிறகு அதனை உருண்டைகளாக உருட்டி இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேகவைத்து எடுத்தால் சுவையான உப்பு உருண்டை தயார்.

Nutrition

Serving: 450g | Calories: 155kcal | Carbohydrates: 3.6g | Protein: 14g | Fat: 5.1g | Sodium: 79mg | Potassium: 127mg | Vitamin A: 46IU | Vitamin C: 132mg | Calcium: 24mg | Iron: 15mg

இதனையும் படியுங்கள் : மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான முட்டை கோலா உருண்டை ஒரு தடவை இப்படி செய்து பாருங்க!

-விளம்பரம்-