- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதுவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் தக்காளி, வெங்காயம், சிறிதளவு கீரை வைத்து ஒரு ரெசிபி செய்யுங்கள். அதுவும் வழக்கமாக செய்வது போன்று தக்காளி சாதம், கீரை சாதம் என்று செய்யாமல் வித்தியாசமாக தாளித்த சாதம் செய்யுங்கள். குறிப்பாக இந்த சாதம் ருசியாக இருப்பதோடு, சத்தானதாகவும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாகவும் இருக்கும். ஒரே ஒருமுறை இந்த சாதம் செய்து கொடுங்கள், நிச்சயம் அடிக்கடி செய்து கொடுக்க சொல்லி கேட்பார்கள் அந்த அளவுக்கு ருசியாக இருக்கும்.
உங்கள் குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு ஒவ்வொரு நாளும் வித்தியாசமா கலவை சாதம் மாதிரி ஏதாவது செஞ்சி கொடுக்கனும் நினைத்தால் இந்த சாதம் செய்து கொடுத்து விடுங்கள். குழந்தைகள் டிபன் பாக்ஸை காலி பண்ணிட்டு தான் வீட்டுக்கு கொண்டு வருவாங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பர் டேஸ்டான ரெசிபி. உங்கள் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்துட்டு நீங்களும் சாப்பிட்டு பாருங்கள் உங்களுக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். இப்போது சுவையான தாளித்த சாதம் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : மதிய உணவிற்கு சுட சுட ஒன் பாட் ரசம் சாதம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், சோம்பு, பூண்டு சேர்த்து தாளிக்கவும்.
பின் பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், பச்சை மிளகாய், தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதன்பிறகு கீரை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் அரிசியை சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர், கொத்தமல்லி, நெய் சேர்த்து கலந்து குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான தாளித்த சாதம் தயார்.






