- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 3
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
இன்று நாம் ஒரு அட்டகாசமான மற்றும் அற்புதமான சுவையில் இருக்கும் ஒரு தோசை ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் வீட்டில் தோசை சுடும் போது அதிகபட்சமான அளவு முட்டை தோசை மட்டும் தான் செய்திருப்போம். ஆனால் இன்று மிகவும் வேகமாகவும், எளிமையாகவும் செய்யக்கூடிய தாளிப்பு தோசை ரெசிபி பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் எப்பொழுதும் போல் தோசை சுடுவதற்கு பதில் உங்கள் வீட்டில்
இதையும் படியுங்கள் : மொறு மொறு சோள மாவு தோசை செய்வது எப்படி ?
உள்ளவர்களுக்கு இது போல் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் ஒரு தோசை சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு தோசை சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் வாங்கி சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த சுவையான தாளாப்பு தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தம், அதில் ஒரு டீஸ்பூன் கடுகு ஊளுந்த பருப்பு சேர்த்து கொள்ளவும்
பின் கடுகு நன்கு பொரிந்து வந்தவுடன் ஒரு கொத்து கருவேப்பிலை, மற்றம் ஒரு டீஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து வதக்கவும். கடவை பருப்பு நன்கு வறுப்பட்டதும்.
இதனுடன் பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், ஒரு துண்டு துருவிய இஞ்சி, மற்றும் ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டு போன்ற பொருட்களை சேர்த்து நன்கு வதக்கவும்.
பூண்டு நன்கு வதங்கியதும் இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியதும் கடாயை இறக்கி விடுங்கள்.
பின் ஒரு பெரிய பவுள் நிறைய தோசை மாவு எடுத்து கொண்டு அதில் நான் செய்த தாளிப்பை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின் வழக்கம் போல் தோசை கல்லை அடுப்பில் வைத்து.
அதில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கல் சூடானதும் இரண்டு கரண்டி மாவை தோசைக் கல்லில் ஊற்றி மாவை விரித்து விட்டு தோசைகளாக வார்த்து இருபுறமும் வேக வைத்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான தாளிப்பு தோசை தயார்.






